பதிவு செய்த நாள்
29 டிச2018
04:20

சத்தியமங்கலம் : சத்தி மார்க்கெட்டில், ஒரே நாளில் மல்லிகை பூ, 800 ரூபாய் விலை உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக, மல்லிகை பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்தது.
சத்தி பூ மார்க்கெட்டில், நேற்று முன்தினம், 1 கிலோ, 1,015 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்றது; நேற்று, 1,802 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரே நாளில், 800 ரூபாய் உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் முல்லை பூ, 1 கிலோ, 660 முதல், 740 ரூபாய்; கனகாம்பரம், 300 முதல், 350 ரூபாய்; சம்பங்கி, 30 ரூபாய்; ஜாதிமல்லி, 500 ரூபாய்; காக்கடா, 525 முதல், 625 ரூபாய் வரை விற்பனையாகின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|