பதிவு செய்த நாள்
29 டிச2018
04:21

புதுடில்லி : ‘‘உள்நாட்டில், வெங்காய விலை சரிவை கட்டுப்படுத்த, அதன் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் ஊக்கச் சலுகையை, இரு மடங்கு உயர்த்த வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர், மத்திய நிதியமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘வெங்காய ஏற்றுமதியாளர்களுக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தில் வழங்கப்படும், 5 சதவீத வரிச் சலுகையை, 10 சதவீதமாக உயர்த்தி, 179 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்’ என, அவர் தெரிவித்து உள்ளார். இதனால், வெங்காயம் ஏற்றுமதி அதிகரித்து, உள்நாட்டில், அதன் விலை கட்டுக்குள் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெங்காய ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்கச் சலுகை திட்டம், 2019, ஜன., 12ல் முடிவடைகிறது. இது, ஜூன் வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தாண்டு, பருவமழை நன்கு இருந்ததால், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில், வெங்காயம் விளைச்சல் அமோகமாக இருந்தது. அதனால், மஹாராஷ்டிராவில் இருந்து, வெங்காயம் கொள்முதல் செய்வது குறைந்து, அங்கு அதன் விலை வீழ்ச்சி கண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|