பதிவு செய்த நாள்
29 டிச2018
04:23

புதுடில்லி : இந்தாண்டு, பல்வேறு பிரச்னைகளை சந்தித்த போதிலும், இந்திய பங்குச் சந்தைகள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 ஆயிரத்து, 850 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதன் மூலம், அதிக தொகை திரட்டி, சர்வதேச பங்குச் சந்தைகளில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.
இது குறித்து, ‘யர்னஸ்ட் அண்டு யங்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தாண்டு, இந்திய பங்குச் சந்தைகள், 161 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 38 ஆயிரத்து, 850 கோடி ரூபாய் திரட்டி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா, 261 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 42 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டி, முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பண நெருக்கடி போன்ற பிரச்னைகளின் தாக்கத்தை, இந்திய பங்குச் சந்தைகள் இந்தாண்டு சந்தித்தன. இந்த நிலையிலும், முதல் அரையாண்டில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக, புதிய பங்கு வெளியீடுகள் அதிகரித்துள்ளன.
சந்தை நிலவரம் :
அதேசமயம், இரண்டாவது அரையாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் குறைந்துள்ளன. அக்., – டிச., வரையிலான நான்காவது காலாண்டில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இரண்டு புதிய பங்கு வெளியீடுகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில், ஒன்பது வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே காலத்தில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட புதிய பங்கு வெளியீடுகள், 31 லிருந்து, எட்டாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமப் பிரச்னையால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பண நெருக்கடி, ரூபாய் மதிப்பின் சரிவு போன்ற காரணங்களால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், புதிய வெளியீடுகள் குறைந்துள்ளன.
புதிய பங்கு வெளியீடுகளுக்கு அனுமதி பெற்ற பல நிறுவனங்கள், சாதகமற்ற சந்தை நிலவரம் காரணமாக, பொறுத்திருந்து வெளியீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|