பதிவு செய்த நாள்
29 டிச2018
04:25

புதுடில்லி : கடந்த நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடனுக்கு உடந்தையாக இருந்த, 6,000 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அவர் லோக்சபாவில் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தொடர்பான விசாரணையில், 6,049 அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணம் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மீது, வாராக்கடன் தொகையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலருக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. பலர், பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவரவர் செய்த தவறுகளின் பேரில், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி துறையின் வாராக்கடன், 2016 மார்ச் நிலவரப்படி, 5.66 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தாண்டு, மார்ச்சில், 9.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|