பதிவு செய்த நாள்
29 டிச2018
04:28

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தின் பதிவு பட்டியலில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் துவக்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்களை களையெடுக்கும் முயற்சியை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செயல்படாமலும், நிதி நிலை அறிக்கைகளை தாக்கல் செய்யாமலும் உள்ள நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி, லோக்சபாவில் கூறியதாவது: கடந்த, 2017 டிச., 31 நிலவரப்படி, செயல்படாத, 2.26 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டில், இரண்டு லட்சத்து, 25 ஆயிரத்து, 910 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில், செயல்படாத, ஒரு லட்சத்து, 150 நிறுவனங்கள், பதிவேட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, போலி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|