பதிவு செய்த நாள்
30 டிச2018
00:31

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் இணைப்பால், நாட்டில் உள்ள, ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கை, 2.07 லட்சமாகக் குறைந்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2016- – 17ம் நிதியாண்டில், நாட்டில், 2.08 லட்சம், ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டில் இருந்தன. இது, 2017 -– 18ம் நிதியாண்டில், 2.07 லட்சமாகக் குறைந்துள்ளது.இதே காலத்தில், வங்கி கிளையுடன் இணைந்த, ஏ.டி.எம்., மையங்கள் எண்ணிக்கை, 1.09 லட்சத்தில் இருந்து, 1.06 லட்சமாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், வங்கி கிளை சாராத இடங்களில் செயல்படும், ஏ.டி.எம்.,கள், 98 ஆயிரத்து, 545லிருந்து, ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.பொதுத் துறை வங்கி, ஏ.டி.எம்.,கள், 1.48 லட்சத்தில் இருந்து, 1.45 லட்சமாகக் குறைந்துள்ளது.தனியார் துறைதனியார் வங்கி, ஏ.டி.எம்.,கள், 58 ஆயிரத்து, 833லிருந்து, 60 ஆயிரத்து, 145 ஆக அதிகரித்துள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகளின் இணைப்பும், பெருகி வரும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளும், ஏ.டி.எம்., மையங்கள் குறைய வழி வகுத்துள்ளன.கடந்த, 2017, ஆக., – 2018, ஆக., வரையிலான ஓராண்டில், ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மற்றும் பேமன்ட் பேங்க்’ ஆகியவை தவிர்த்து, இதர வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்கள் எண்ணிக்கை, 2.04 லட்சமாகக் குறைந்துள்ளது.இதே காலத்தில், பெட்ரோல் நிலையங்கள், பல சரக்கு கடைகள் போன்றவற்றில், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான சாதனங்களை நிறுவுவது அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, 15 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும், சில ஆண்டுகளாக, இப்பிரிவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.பரிவர்த்தனைநாட்டில், ரொக்கமின்றி, ‘டெபிட் கார்டு, இ – வாலட்’ போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, அபாரமாக உள்ளது.கடந்த 2013- – 14ம் நிதியாண்டில், இவ்வகை மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 8,100 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2017- – 18ம் நிதியாண்டில், 1.42 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மொபைல் போனில், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு, யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா சேவை உதவுகிறது. இந்த வசதி மூலம், கடந்த நிதியாண்டில், 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 91.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.இந்தாண்டு, ஏப்ரல் – செப்டம்பர் வரை, 2.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 157.9 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சிக்கன நடவடிக்கைநாட்டில், பொது மற்றும் தனியார் துறையில், 44 வங்கிகள் உள்ளன. கடந்த ஆண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைத்துக் கொண்டது. இவ்வங்கிக்கு, 59 ஆயிரத்திற்கும் அதிகமான, ஏ.டி.எம்.,கள் உள்ளன. பல வங்கிகள், சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, லாபமற்ற, ஏ.டி.எம்.,களை மூடி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|