இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ... ... பங்குசந்தை நிலவரம் பங்குசந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய தொழில்நுட்ப திறன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
23:49

புதிதாக வேலைவாய்ப்பு தேடுபவர்களும் சரி, ஏற்கனவே பணியில் உள்ளவர்களும் சரி, பணியிட சூழலில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் மற்றும் புதிய போக்குகளை அறிந்து வைத்திருப்பது அவசியம். அந்த வகையில், 2019ம் ஆண்டில் அதிகம் தேவைப்படக்கூடிய பணியிடம் சார்ந்த தொழில்நுட்ப திறன்களை, மனிதவள மேம்பாட்டுத் துறை வல்லுனர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்த திறன்கள் வருமாறு:

‘டிஜிட்டல்’ திறன்:
உலகம் வெகு வேகமாக, ‘டிஜிட்டல்’ மயமாகி கொண்டிருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களில் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கிமயம் முழு வீச்சில் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் நுட்பங்களை கையாளும் ஆர்வம் மற்றும் திறன் இருப்பதை நிறுவனங்கள் விரும்புகின்றன. புதியவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

செயற்கை நுண்ணறிவு:
செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை நிறுவனங்கள் பெருமளவில் பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால் டேட்டா சயின்டிஸ்ட் போன்ற பதவிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற நுட்பங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பவர்களை நிறுவனங்கள் அரவணைத்துக் கொள்கின்றன.

தகவல் தொடர்பு:
தொழில் முறை வலைப்பின்னல் சேவையான, ‘லிங்க்டுஇன்’ வெளியிட்ட அறிக்கை, நிறுவனங்களில் தகவல் தொடர்பு சார்ந்த திறன்களில் தான் பெரிய இடைவெளி இருப்பதாக தெரிவிக்கிறது. எனவே, மற்ற குழுக்களுடன் பேசும் ஆற்றல், அறிக்கை தயார் செய்வது, காட்சி விளக்கங்களை தயார் செய்யும் திறன் ஆகியவை பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

சைபர் பாதுகாப்பு:
நிறுவனங்களும், அலுவலகங்களும் நவீன தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் இணைய சேவைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அதிகரித்துள்ளது. எனவே சைபர் பாதுகாப்பு தொடர்பான திறன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்த வகை திறன் இருப்பது வாய்ப்புகளை அகல திறக்கும்.

சமூக வலைதள சேவை:
பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைதள சேவைகள் நிறுவனங்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளன. நிறுவனங்களும், பிராண்ட்களும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்கள் மனதை அறியவும் சமூக வலைதள சேவைகளை நாடுகின்றன. சமூக ஊடக பயன்பாடு நுட்பங்களை அறிந்திருந்தால், அதுவே வேலை வாய்ப்பாக அமையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 30,2018
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)