இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ... ... பங்குசந்தை நிலவரம் பங்குசந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
2018ம் ஆண்டின் நிதி போக்குகள் கற்றுத்தரும் முதலீட்டு பாடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
23:58

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்வது எப்படி; ‘டெப்ட் பண்ட்’ தொடர்பான, ‘ரிஸ்க்’ அம்சம் என்ன... என்பது உள்ளிட்ட, முக்கிய பாடங்களை, 2018ம் ஆண்டின் நிதி போக்குகள் உணர்த்துகின்றன.

விடைபெறும் 2018ம் ஆண்டு மற்ற ஆண்டுகளைப் போல, பல்வேறு ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், நிதி உலகைப்பொறுத்தவரை கவனிக்கத்தக்க நிதி போக்குகளை கொண்டிருந்தது. கடன்களைப் பொறுத்தவரை வட்டி விகிதம் உயர்ந்த ஆண்டாக அமைந்தது.

வைப்பு நிதி முதலீட்டிற்கான வட்டியும் உயர்ந்தது. பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டது. ரியல் எஸ்டேட் துறையின் மந்த நிலை தொடர்ந்தது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் நல்ல முன்னேற்றத்தை கண்டது.

பரவலான முதலீடு ;
இந்த நிதி போக்குகள் முதலீட்டாளர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டு முடிவுகளில் தாக்கம் செலுத்துவதாக அமைந்ததோடு, முக்கியமான முதலீட்டு பாடங்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. முதல் பாடம், அதிக பலனை துரத்திச்செல்வதில் உள்ள ஆபத்தை அறிவதாகும்.

2018ல் பெரும்பாலான முதலீட்டாளர்கள், ‘ஸ்மால் மற்றும் மிட்கேப்’ நிதிகளை அதிகம் நாடினர். முந்தைய ஆண்டில் இந்த வகை நிதிகள், 40 சதவீதத்திற்கும் அதிக பலனை அளித்ததே இதற்கான காரணமாக அமைந்தது. பலரும் இந்த போக்கை அறுவடை செய்ய முயன்றனர்.

முதல் முறை மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களில் சிலர், இந்த பிரிவில் உற்சாகத்தோடு முதலீடு செய்தனர்.ஆனால், 2018ம் ஆண்டில் ஸ்மால் மற்றும் மிட்கேப் நிதிகள் சரிவை சந்தித்து இழப்பை ஏற்படுத்தின. கையை சுட்டுக்கொண்டவர்கள் மியூச்சுவல் பண்ட் முதலீட்டையே சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உண்டானது.

இருப்பினும், லார்ஜ்கேப், மல்டிகேப் நிதிகள், இ.எல்.எஸ்.எஸ்., நிதி என பரவலாக முதலீடு செய்திருந்தவர்களுக்கு அதிக இழப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு செயல்பாட்டை பார்த்து, அதிக பலன் நாடி குறிப்பிட்ட வகையில் அதிகமாக முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்கை இது உணர்த்துகிறது. எப்போதுமே, பரவலான முதலீடு பாதுகாப்பானது மற்றும் நல்ல பலன் தரக்கூடியது.

டெப்ட் பண்ட் எனப்படும் கடன்சார் முதலீடுகள் தொடர்பான ரிஸ்க் அம்சம் இரண்டாவது பாடமாக அமைகிறது. டெப்ட் பண்ட்கள் வைப்பு நிதியுடன் ஒப்பிடக்கூடியவை. வைப்பு நிதிக்கு மாற்றாக கருதக்கூடியவை.

ரிஸ்க் அம்சம்:
ஆனால், இரண்டும் ஒன்றல்ல. டெப்ட் பண்ட்கள் ரிஸ்க் இல்லாதவை அல்ல; ஒப்பிட்டு அளவில் குறைந்த ரிஸ்க் கொண்டவை. வைப்பு நிதியை விட அவை கூடுதல் பலன தரக்கூடியவை என்றாலும், நிலையான பலன் தரக்கூடியவை அல்ல. பல்வேறு காரணங்களால், 2018ல் டெப்ட் பண்ட்கள் குறைந்த பலனையே அளித்தன. ஆக, டெப்ட் பண்ட் ரிஸ்க் அம்சத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான தன்மையை புரிய வைத்தது மற்றொரு பாடமாக அமைகிறது. ரியல் எஸ்டேட் துறையில் நீடித்த மந்த நிலை, முதலீட்டு நோக்கில் ரியல் எஸ்டேட்டை அணுகுவதில் உள்ள சிக்கலை உணர்த்தின. வாங்கும் விலைக்கு ஏற்ப அதன் மதிப்பு அமைய வேண்டும் என்பதையும், வாங்குவதற்கு முன் அது தரக்கூடிய பலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் முதலீட்டாளர்கள் உணர்ந்தனர். மேலும் வீட்டுக்கடனுக்கான செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும் என, புரிந்து கொண்டனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)