ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ... பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள் பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்­கள் வளத்தை பெருக்­கு­வ­தற்­கான எளிய சேமிப்பு வழி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
23:47

புத்­தாண்­டில், உங்­கள் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பல­வி­த­மான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டி­ருக்­க­லாம். இவற்­றோடு, உங்­கள் நிதி வாழ்க்­கையை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான உறு­தி­மொ­ழி­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ள­லாம். அந்த வகை­யில், உங்­கள் சேமிப்பை அதி­க­மாக்கி, நிதி வளத்தை பெருக்கி கொள்ள உத­வக்­கூ­டிய எளிய வழி­களை பார்க்­க­லாம்.


கடனை கவனி



கடன் சுமையை குறைப்­பது என்­பது உங்­கள் தீர்­மா­ன­மாக இருக்­கட்­டும். கிரெ­டிட் கார்டு பயன்­ப­டுத்­து­வர் எனில், நிலு­வை­யில் உள்ள தொகையை செலுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். கடனை அடைக்­க­வில்லை எனில், உங்­கள் பணத்தை இழக்­கி­றீர்­கள் என பொருள். அதிக வட்டி கடனை முத­லில் அடைக்க வேண்­டும்.


வாங்குவதில் கவனம்



உங்கள் ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்குவது மற்றும் பார்த்தவுடன் பொருட்களை வாங்குவது வீண் செலவை ஏற்படுத்தும். முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவதன் மூலம்,
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சமாக்கலாம்.


பணத்­தின் பாதை



உங்­கள் பணத்தை எதற்­காக எல்­லாம் செல­விட்டு கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை தெளி­வாக
உணர்ந்­தி­ருக்­கி­றீர்­களா? அதே போல எங்­கெல்­லாம் முத­லீடு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­ப­தி­லும் தெளிவு வேண்­டும். இந்த விபரங்­களை எல்­லாம் குறித்து வைப்­பது, கையில் உள்ள பணத்தை சிறந்த முறை­யில் திட்­ட­மிட உத­வும்.


சேமிப்­பும் முத­லீ­டும்



மாதந்­தோ­றும் குறிப்­பிட்ட தொகையை சேமித்து வையுங்­கள். ஆனால் இந்த தொகை சேமிப்பு
கணக்­கில் முடங்கி விடா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள். சேமித்த பணத்தை சரி­யான சாத­னங்­களில் முத­லீடு செய்­வ­தன் மூலம் அதிக பலன் பெற­லாம். உங்­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ற முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்­யுங்­கள்.


சேமிப்­பின் பலன்


சேமிப்­பது அவ­சி­ய­மா­னது என்­றா­லும், அதற்­காக செலவே செய்­யா­மல் இருக்க வேண்­டும் என்­றில்லை. உங்­க­ளுக்கு பல­னை­யும், மதிப்­பை­யும் தரக்­கூ­டிய செல­வில் ஈடு­ப­டு­வ­தில் தவ­றில்லை. கட­னை­யும், செல­வை­யும் கட்­டுப்­ப­டுத்தி, சரி­யான வகை­யில் முத­லீட்­டை­யும் மேற்­கொண்­டி­ருந்­தால், விருப்­ப­மான செல­வு­க­ளி­லும் ஈடு­ப­ட­லாம். அது வாழ்க்­கையை வள­மாக்­கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)