பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி? பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி? ...  மோசடி சேமிப்பு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி மோசடி சேமிப்பு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி ...
உலக முதலீட்டு பார்வையின் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2019
00:38

நம்முடைய முதலீட்டு பயணத்தில், உலக முதலீட்டு பார்வைகள் அதிக பங்கு வகிக்கும் சூழல் நோக்கி, நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.


இந்திய சந்தையின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிப்பதில், உலக முதலீட்டு பார்வைகள் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, உலக சந்தை சார்ந்த புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.


அதிர்வலைகள்


உலக முதலீட்டு சூழல், நம் உள்நாட்டு சூழலை விட அதிக நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தி வருவதை, நம் கவனத்திற்கு முதலில் கொண்டு வர வேண்டும்.


புதிய ஆண்டு துவங்கியதும், அமெரிக்க நிறுவனமான, ‘ஆப்பிள்’ அதன் வருங்காலம் குறித்த லாபக் கணிப்பை குறைத்துக் கொண்டது. ஆசியாவில் அதன் வர்த்தகம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையவில்லை என, அதன் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் அறிவுறுத்தியது. இந்த அறிவிப்பு, உலக முதலீட்டு சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முன்னோடிகள்


அடுத்த நாள், சந்தை ஆட்டம் கண்டது. நுகர்வின் பிம்பமாக பார்க்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் வருங்கால பார்வை, வளரும் நுகர்வு சூழலின் நிலையாமையை பிரதிபலிப்பதாக சந்தை எடுத்துக் கொண்டது.அடுத்த நாள், ‘பிரிஸ்டொல்-மையர்ஸ் ஸ்குயிப்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், 7,400 கோடி டாலர் மதிப்பில், ‘செல்ஜின்’ என்ற இன்னொரு நிறுவனத்தை வாங்கியது. இந்த இரு நிறுவனங்களும், புற்று நோய் மருந்து தயாரிப்பில் முன்னோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே மருத்துவ உலகு, இது போன்ற இன்னும் பல மாற்றங்களையும், இணைப்புகளையும் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க சந்தையின் வரவேற்பை பெற்றது.


சவால்


ஆக, ஒரு பக்கம், ‘FAANGS’ என்ற மென்பொருள் நிறுவன மதிப்பீடுகள் தொடர்ந்து சரிந்தாலும், மறுபக்கம், மருத்துவ நிறுவனங்கள் மதிப்பு கூடும் சூழல் உருவாகிறது.


அமெரிக்க சந்தை, தன் பார்வையை அடிக்கடி மாற்றிக் கொள்ளவும் செய்கிறது. ஒரு நாள் பெரும் சரிவை கண்ட சந்தை, அடுத்த ஓரிரு நாட்களிலேயே மீண்டும் எழுந்தது. அதற்கான அதிவேக மாற்றங்கள் அங்கே தொடர்ந்து அரங்கேறும் என்பது தெளிவாக தெரிகிறது. இதே போல, இறங்கு முகம் காண்பதும் நடக்கும்.அமெரிக்க சந்தையில் பிரதிபலிக்கும் இந்த ஏற்ற இறக்கங்கள், உலக சந்தைகளுக்கு சொல்லும் செய்தி, இந்த ஆண்டு, உலக சந்தைக்கு சவாலான ஆண்டாக அமையும் என்பதே.

சரிவுகள்


நம் சந்தையும், இதே போன்ற ஏற்றங்களையும், சரிவுகளையும் சந்திக்கும் ஆண்டாக, 2019 அமையும் என்றே தோன்றுகிறது. இதை எதிர்கொண்டு வெல்வதற்கு தேவையான புரிதலை, ஒவ்வொரு முதலீட்டாளரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


உலக முதலீட்டு பார்வைகளையும், வளரும் நாடுகள் சார்ந்த அமெரிக்க முதலீட்டு மதிப்பீடுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் முனைய வேண்டும்.
அதே நேரம், அவர்கள், தாங்கள் எடுத்த முடிவுகளை, மிக வேகமாக மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ள பழக வேண்டும்.உலகப் பார்வையையும், உள்நாட்டு பார்வையையும் ஒருங்கிணைத்து பார்க்க வேண்டிய சூழல் நோக்கி, இந்த புத்தாண்டில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)