பதிவு செய்த நாள்
09 ஜன2019
23:17

புதுடில்லி:டில்லியில் இன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சிறிய நிறுவனங்கள், வீடு வாங்குவோருக்கான சலுகை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், 32வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நடைபெற உள்ளது.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., பதிவிற்கான, ஆண்டு விற்று முதல் வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்.
ரியல் எஸ்டேட்
வீடு வாங்குவோர் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் குறித்தும், இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிது.கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டி முடித்த சான்று இல்லாத, அதேசமயம், குடி புக ஏற்ற வீடுகளுக்கு தற்போது, 12 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது.இதை, 5 சதவீதமாக குறைப்பது குறித்து, கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
வீடுகள் விற்பனையின் போது, கட்டி முடிக்கப்பட்ட சான்று இருந்தால், வாங்குவோரிடம், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுவதில்லை.கேரள வெள்ளப் பாதிப்பு நிவாரணத்திற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு, 1 சதவீத இடர்ப்பாட்டு மேலாண்மை வரி விதிப்பது குறித்து, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மேலும், சிறிய நிறுவனங்களுக்கு, ‘காம்போசிஷன்’ எனப்படும் கலப்பு வரி திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|