பதிவு செய்த நாள்
11 ஜன2019
23:50
புதுடில்லி:கடந்த
ஆண்டு, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 17 மாதங்களில்
இல்லாத வகையில், 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில்,
8.1 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 8.4 சதவீதமாக இருந்தது.
இந்த சரிவிற்கு, தயாரிப்பு, நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் துறைகளில் ஏற்பட்ட தொய்வு தான் முக்கிய காரணம். கடந்த, 2017, நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 8.5 சதவீதமாக காணப்பட்டது. இது, அதே ஆண்டு, ஜூனில், மைனஸ் 0.3 சதவீதமாக பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு
மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 0.4 சதவீதமாக
பின்னடைவைக் கண்டுள்ளது. இது, 2017, நவம்பரில், 10.4 சதவீதமாக
உயர்ந்து இருந்தது.இதே காலத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறை வளர்ச்சி, 3.1லிருந்து, 0.9 சதவீதமாக குறைந்து உள்ளது.
அதேசமயம், சுரங்கத்துறை வளர்ச்சி, 1.4 சதவீதத்தில் இருந்து, 2.7 சதவீதமாக உயர்ந்து
உள்ளது. மின்
துறை உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதத்தில் இருந்து, 5.1 சதவீதமாக
அதிகரித்து உள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|