சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘இன்போசிஸ்’ டிவிடெண்டு: ஒரு பங்கிற்கு ரூ.4 வழங்கப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
23:52

பெங்களூரு:‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னம், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சிறப்பு, ‘டிவி­டெண்டு’ அறி­வித்­துள்­ளது.அத்­து­டன், வெளிச் சந்­தை­யில் இருந்து, 8,260 கோடி ரூபாய் மதிப்­புள்ள பங்­கு­களை திரும்ப வாங்க உள்­ளது.


இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நிறு­வ­னம், நடப்பு நிதி­யாண்­டிற்கு சிறப்பு டிவி­டெண்டை அறி­வித்­து உள்­ளது. இதன்­படி, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பங்கு ஒன்­றுக்கு, 4 ரூபாய் வழங்­கப்­படும். இதற்­கான பதிவு நாள், ஜன., 25.நிறு­வ­னத்­தின் தனி இயக்­கு­னர், கிரண் மசூம்­தார் ஷாவின் பத­விக் காலத்தை இரண்­டாம் முறை­யாக நீட்­டிக்­க­வும், இயக்­கு­னர் குழு ஒப்­பு­தல் வழங்­கி­ உள்­ளது.


மேலும், மூல­தன ஒதுக்­கீடு கொள்­கைப்­படி, வெளிச் சந்­தை­யில் இருந்து, பங்­கு­களை திரும்ப வாங்­க­வும் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.ஒரு பங்கு, 800 ரூபாய் வீதம், 8,260 கோடி ரூபாய்க்கு, வெளிச் சந்­தை­யில் பங்­கு­கள் வாங்­கப்­படும்.இந்த நட­வ­டிக்­கைக்­காக, தலைமை செயல்­பாட்டு அதி­காரி, தலைமை நிதி அதி­காரி ஆகி­யோர் அடங்­கிய குழு அமைக்­கப்­பட்­டு உள்­ளது.
இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


நிகர லாபம் சரிவு


இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், அக்­டோ­பர் –
டிசம்­பர் வரை­யி­லான மூன்­றா­வது காலாண்­டில், 29.6 சத­வீ­தம் குறைந்து, 3,610 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்­டின், இதே காலத்­தில், 5,129 கோடி ரூபா­யாக இருந்­தது.
இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 17 ஆயி­ரத்து, 794 கோடி­யில் இருந்து, 21 ஆயி­ரத்து, 400 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மொத்த வரு­வா­யில், நிறு­வ­னத்­தின்,
‘டிஜிட்­டல்’ பிரி­வின் பங்கு, 33.1 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.


அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில், கிறிஸ்­து­மஸ் மற்­றும் புத்­தாண்டு விடு­முறை கார­ண­மாக, நிறு­வ­னங்­கள் குறைந்த நாட்­களே இயங்­கும். இது, அந்­நா­டு­க­ளைச் சார்ந்­துள்ள, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­க­ளின், மூன்­றா­வது காலாண்டு செயல்­பா­டு­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது வழக்­கம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)