ஐ.சி.எஸ்.ஐ., மத்திய குழுவில் சந்தான கிருஷ்ணன் நியமனம் ஐ.சி.எஸ்.ஐ., மத்திய குழுவில் சந்தான கிருஷ்ணன் நியமனம் ...  மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய அரசு தீவிரம் மிக விரைவில் புதிய தொழில் கொள்கை :சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்த மத்திய ... ...
‘ஏர் இந்தியா’ வருவாய் 23 சதவீதம் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2019
23:40

புதுடில்லி:நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., காலாண்­டில், ‘ஏர் இந்­தியா’ நிறு­வ­னத்­தின் பய­ணி­யர் பிரிவு வரு­வாய், 23 சத­வீ­தம் உயர்ந்து, 5,538 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இது, 2017 -– 18ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 4,615 கோடி ரூபா­யாக இருந்­தது.

அதே­ச­ம­யம், இதே காலத்­தில், ஏர் இந்­தியா விமா­னங்­களில் பய­ணம் செய்­தோர் எண்­ணிக்கை, 4 சத­வீ­தம் மட்­டுமே அதி­க­ரித்து, 53.28 லட்­சத்­தில் இருந்து, 55.27 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.
இது குறித்து, ஏர் இந்­தியா அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:


மதிப்­பீட்டு காலாண்­டில், 15 புதிய வழித்­த­டங்­களில் போக்­கு­வ­ரத்து சேவையை, நிறு­வ­னம் மேற்­கொண்­டது. வரு­வா­யு­டன் ஒப்­பி­டும் போது, பய­ணி­யர் எண்­ணிக்கை வளர்ச்சி குறை­வாகவுள்­ளது. இருந்த போதி­லும், பயண துாரம் அடிப்­ப­டை­யி­லான காலி இருக்­கை­க­ளின் விகி­தா­சா­ரத்தை பொறுத்­த­வரை, பய­ணி­யர் எண்­ணிக்கை வளர்ச்சி அதி­கம் என­லாம்.


தற்­போது, 122 விமான போக்­கு­வ­ரத்து சேவை­களை, ஏர் இந்­தியா மேற்­கொண்டு வரு­கிறது. இந்­
நி­று­வ­னத்­தின் வரு­வா­யில், 65 சத­வீ­தம், பன்­னாட்டு விமான சேவை­களில் கிடைக்­கிறது.
இவ்­வாறு அவர் கூறி­னார்.


லாப பாதைக்கு திரும்­புமா?


பொதுத் துறை­யைச் சேர்ந்த ஏர் இந்­தியா நிறு­வ­னம், 2007ல், அதன், இந்­தி­யன் ஏர்­லைன்ஸ் துணை நிறு­வ­னத்தை இணைத்­துக் கொண்­டது. அது முதல், இழப்பை சந்­தித்து வரு­கிறது. தற்­போது, 48 ஆயி­ரம் கோடி ரூபாய் கடன் நெருக்­க­டி­யில் உள்­ளது. இந்­நி­று­வ­னத்தை விற்க, மத்­திய அரசு எடுத்த முயற்­சி­கள் வீணா­கின.இதை­ய­டுத்து, ஏர் இந்­தி­யா­வில், கூடு­தல் மூல­த­னம் மேற்­கொண்டு, புத்­து­யி­ரூட்­டும் முயற்­சி­யில், மத்­திய அரசு ஈடு­பட்­டுள்­ளது.


ஏர் இந்­தியா நிர்­வா­கத்தை முழு­மை­யாக சீர­மைக்க, முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. தலைமை செயல் அதி­காரி முதல், பல நிலை­களில், அனு­ப­வம் வாய்ந்த வல்­லு­னர்­களை நிய­மிக்­கும் திட்­டம் தயா­ராகி வரு­கிறது. மேலும், நிறு­வ­னத்­தின் கடன் பிரச்­னைக்கு தீர்வு காண்­பது குறித்­தும், மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­து­டன், விமான போக்­கு­வ­ரத்து அமைச்­ச­கம் பேசி வரு­கிறது.
கடன்­க­ளுக்கு தீர்வு காண்­ப­து­டன், சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட உள்­ள­தால், மீண்­டும் ஏர் இந்­தியா லாப வானில்சிற­க­டித்து பறக்க வாய்ப்பு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ... மேலும்
business news
புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக ... மேலும்
business news
சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)