பதிவு செய்த நாள்
14 ஜன2019
13:48

புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.
மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நவம்பர் மாதம் 4.64ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. 2017ல் இதேகாலக்கட்டத்தில் 3.80 சதவீதமாக இருந்தது.
கச்சா எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களின் பணவீக்கம் குறைந்ததன் எதிரொலியாக டிசம்பரில் பணவீக்கம் குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நவம்பரில் 16.28 சதவீதமாக இருந்த கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் டிசம்பரில் 8.38 சதவீதமாக பாதிக்கு குறைந்துள்ளது.
இதேப்போன்று உணவுப்பொருட்களின் பணவீக்கம் நவம்பரில் 3.31ஆக இருந்தது, நவம்பரில் 0.07 சதவீதமாக குறைந்தது. காய்கறிகளின் பணவீக்கம் 26.98 சதவீதத்திலிருந்து 17.55 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|