பதிவு செய்த நாள்
15 ஜன2019
00:24

பெங்களூரு, ஜன. 15–‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, சச்சின் பன்சால், 150 கோடி ரூபாயை, வாடகை கார் சேவை நிறுவனமான, ‘ஓலா’வில் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடு குறித்த விபரம், நிறுவன பதிவாளர் அலுவலக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஓலா நிறுவனத்தின், 70 ஆயிரத்து, 588 முன்னுரிமை பங்குகளை, ஒரு பங்கின் விலை, 21 ஆயிரத்து, 250 ரூபாய் என்ற அளவில் வாங்கியிருக்கிறார், சச்சின் பன்சால்.இந்தியாவின் முன்னணி, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான, பிளிப்கார்ட் நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின், ‘வால்மார்ட்’ கடந்த ஆண்டு வாங்கியது. பிளிப்கார்டின் சொத்து மதிப்பு, 1 லட்சத்து, 47 ஆயிரம் கோடி ரூபாய். இதில், 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது.எனவே, 1 லட்சத்து, 7,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.இருப்பினும், பிளிப்கார்ட் நிறுவனர்களான, சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும், மிக குறைவான பங்குகளையே பிளிப்கார்ட்டில் வைத்திருந்தனர்.
வால்மார்ட் நிறுவனத்துக்கு பங்குகளை விற்ற வகையில், சச்சின் பன்சாலுக்கு, 1 பில்லியன் டாலர் அதாவது, 7,050 கோடி ரூபாய் கிடைத்ததாக தகவல்கள் வந்தன. இதற்காக அவர், 699 கோடி ரூபாயை முன்பண வரியாக கட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்டிலிருந்து வெளியேறிய சச்சின் பன்சால், பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது, ஓலா நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|