பதிவு செய்த நாள்
15 ஜன2019
00:27

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 18 மாதங்களில் இல்லாத வகையில், 2018, டிசம்பரில், 2.19 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டு, டிசம்பரில், 2.19 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நவம்பரில், 2.33 சதவீதமாக இருந்தது.கடந்த, 2017, டிசம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 5.21 சதவீதமாக உயர்ந்து இருந்தது.அதே ஆண்டு, ஜூன் மாதம், சில்லரை விலை பணவீக்கம், 1.46 சதவீதமாக குறைந்து இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், எரிபொருள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை குறைந்து இருந்ததால், சில்லரை பணவீக்கம் சரிவடைந்துள்ளது. உணவு பொருட்கள் துறையின் பணவாட்டம், 2.61 சதவீதத்தில் இருந்து, 2.51 சதவீதமாக குறைந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை சரிவால், எரிபொருள் மற்றும் மின்சாரம் பணவீக்கம், 7.39 சதவீதத்தில் இருந்து, 4.54 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|