சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்கள் காணாத சரிவு சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்கள் காணாத சரிவு ...  வெளியேறுவாரா நரேஷ் கோயல்? வெளியேறுவாரா நரேஷ் கோயல்? ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2019
00:46

புதுடில்லி, ஜன. 15–இந்தியாவில், பயணியர் வாகன விற்பனை, கடந்த டிசம்பர் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது.இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 0.43 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.டிசம்பரில் மொத்தம், இரண்டு லட்சத்து, 38 ஆயிரத்து, 692 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
இதுவே, அதற்கு முந்தைய ஆண்டான, 2017 டிசம்பர் மாதத்தில், இரண்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 723 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்காததும், இருப்பு எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த சரிவுக்கு ஒரு காரணமாகும்.பயணியர் வாகனங்களில், கார் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை, 2 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

கார்களின் விற்பனை, ஒரு லட்சத்து, 55 ஆயிரத்து, 159 ஆகவும்; பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை, 65 ஆயிரத்து, 506 ஆகவும் இருந்துள்ளன.பயணியர் வாகன விற்பனை மட்டுமின்றி, வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை, டிசம்பரில், 7.80 சதவீதம் சரிந்து, 75 ஆயிரத்து, 984 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, 2.23 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. 12 லட்சத்து, 59 ஆயிரத்து, 26 வாகனங்கள், டிசம்பரில் விற்பனை ஆகியுள்ளன.
அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில், 12 லட்சத்து, 87 ஆயிரத்து, 766 இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பயணியர் வாகன விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டை விட, 4.37 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2018ல், 25 லட்சத்து, 33 ஆயிரத்து, 221 வாகனங்களும்; 2017ல், 24 லட்சத்து, 27 ஆயிரத்து, 46 வாகனங்களும் விற்பனை ஆகியுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)