விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள் விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள் ...  அன்னிய, ‘டேட்டா’ ஆதிக்கத்தை ரிலையன்ஸ் குறைக்கும் : மின்னணு வணிகத்தின் வடிவமைப்பை மாற்றும் அன்னிய, ‘டேட்டா’ ஆதிக்கத்தை ரிலையன்ஸ் குறைக்கும் : மின்னணு வணிகத்தின் ... ...
ஜி.எஸ்.டி., குறைந்தால் வீடு விலை குறையுமா? : இறுதி முடிவு எடுப்பதில் கவுன்சில் திணறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
00:59

சென்னை: ரியல் எஸ்டேட் துறை மீதான, ஜி.எஸ்.டி.,யை குறைப்பதில் இறுதி முடிவு எடுப்பதை, இதற்கான கவுன்சில் ஒத்தி வைத்து இருப்பது, பல்வேறு கேள்வி களை எழுப்பியுள்ளது.நாட்டில் வீடுகள் விலை குறைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு வரி சலுகைகளை அறிவித்து வருகிறது.இருப்பினும், விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் எண்ணிக்கைஅதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய சுமையாக உருவெடுத்து உள்ளது.பெரும்பாலான நகரங்களில், 2018ம் ஆண்டில் வீடு விற்பனை அதிகரித்து இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.குறைந்த வேகத்தில் ஏற்படும் வளர்ச்சியால், இத்துறையில் பெரிய முன்னேற்றம் வராது என, கூறப்படுகிறது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., விகித குறைப்பால், ரியல் எஸ்டேட் துறையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.ஆர்வம்கட்டுமான பொருட்களுக்கான செலவு, அதன் மீதான, ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையும் சேர்த்து விற்பனை விலையில், ஜி.எஸ்.டி., கணக்கிடப்படுகிறது.இதில், உள்ளீட்டு வரி சலுகை என்ற அடிப்படையில் கட்டுமான பொருட்களுக்கான செலவில் கட்டுமான நிறுவனங்களுக்கு கிடைக்கும் பயன், வீடு வாங்குவோருக்கு கிடைப்பதில்லை.இதனால் பலரும், கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக, கட்டுமான பணி முடிந்த நிலையில் உள்ள வீட்டை வாங்குவதில் ஆர்வம்காட்டுகின்றனர்.கட்டுமான பணிகள் முடிந்ததாக சான்றளிக்கப்பட்ட வீடுகள், இதில் விலக்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.ஜி.எஸ்.டி.,யை குறைத்தால் வீடுகள் விலை குறைந்துவிடும் என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறது. ஆனால், குறைந்த விலை வீடுகள் விஷயத்தில் இது, பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.சலுகை குறையும்வீடுகள் விற்பனையில் விதிக்கப்படும், ஜி.எஸ்.டி.,யை வெகுவாக குறைத்தாலும், கட்டுமான பொருட்கள் மீதான உள்ளீட்டு வரி சலுகையும் குறையும். இதனால், வீடுகள் விலை குறையாத நிலை ஏற்படலாம்.இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறைக்கான, ஜி.எஸ்.டி.,யை ஒரே கட்டமாக, 5 சதவீதமாக நிர்ணயிக்கும் வரைவு திட்டம், சமீபத்தில் நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த விஷயத்தில் கவுன்சிலால் இறுதி முடிவுக்கு வர இயலவில்லை.இதையடுத்து இந்த விவகாரம், ஜி.எஸ்.டி., தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.இந்த விவகாரத்தில் எந்த முடிவை எடுப்பதானாலும், வீடு விலை நிர்ணயத்துக்கான அடிப்படை கூறுகளை அறிந்து, அதன் அடிப்படையில் வரி சலுகைகள் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)