பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:20
புதுடில்லி : ‘இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும், 2019- – 20ம் நிதியாண்டில், 7.6 சதவீதமாக உயரும்’ என, ஐ.நா., தெரிவித்துள்ளது.
‘சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக உயரும். இது, வரும் நிதியாண்டில், 7.6 சதவீதமாக அதிகரிக்கும்.
தனியார் துறையில் தேவையும், நுகர்வும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளும் பயனளிப்பதாக உள்ளது. நடுத்தர கால வளர்ச்சிக்கு, தனியார் துறையின் முதலீடுகள் நிலையாக உயர்வது முக்கியம். சர்வதேச பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் நிலையாக, 3 சதவீத வளர்ச்சியை காணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|