பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:14
பண்ருட்டி : முந்திரி ரகங்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் உள்ளூர் மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றை பதப்படுத்தி, வெளிநாடு மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, உலக அளவில் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாகியுள்ளதால், ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, வெளிநாடுகளில் இருந்து முந்திரி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக, 80 கிலோ எடை கொண்ட முந்திரி, 13 ஆயிரம் ரூபாய் வரை விற்றது; தற்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்துள்ளது. மேலும் விலை குறையும் நிலை உள்ளது.
உலக அளவில் முந்திரி பருப்பு ரகங்களின் தேவை குறைவு மற்றும் இந்திய அளவில் பண்டிகை காலம் ஏதும் தற்போது இல்லாததால், முந்திரி பருப்பு விலை குறையும் என்பதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|