பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:15

சென்னை : கோவை, கொடிசியா வர்த்தக மையத்தில், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி, நாளை துவங்குகிறது.
தமிழக அரசு சார்பில், கோவை கொடிசியா வர்த்தக மையத்தில், நாளை முதல், 29ம் தேதி வரை, மூன்று நாட்கள், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடக்க உள்ளது.இக்கண்காட்சியில், 9,000 சதுர மீட்டர் பரப்பளவில், 400 அரங்குகளில், நுாற்பு, நெசவு, பின்னலாடை, ஆயத்த ஆடை, பட்டு, காதி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட, ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளிலும், ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
அவர்களின் தயாரிப்புகளான, நுால் முதல், துணி ரகங்கள் வரை, அனைத்து ஜவுளிகளும், காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஜவுளித் தொழிலின் சிறப்பம்சங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.கண்காட்சியுடன், மத்திய அரசின் அமைப்புகள் சார்பில், ‘இன்ட் டெக்ஸ்போ – 2019’ என்ற தலைப்பில், வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடக்க உள்ளது.
கண்காட்சி துவக்க விழா, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. கண்காட்சியை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி துவக்கி வைக்க உள்ளார். தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, கைத்தறித்துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன், துணை சபாநாயகர் ஜெயராமன் ஆகியோர், பங்கேற்க உள்ளனர்.கைத்தறித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், பன்னாட்டு ஜவுளி கண்காட்சி குறித்து, விளக்க உரையாற்ற உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|