பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:18

வாஷிங்டன் : ‘‘அமெரிக்க விஸ்கிக்கு, இந்தியா அதிக வரி விதிக்கிறது,’’ என, அந்நாட்டு அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகள் விதிக்கும் சுங்க வரிக்கு நிகரான வரி விதிக்கும் மசோதா குறித்து, எம்.பி.,க்கள் கூட்டத்தில், டிரம்ப் பேசியதாவது:‘ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்’ மீதான, 100 சதவீத சுங்க வரியை குறைக்க வேண்டும் என, 2 நிமிடம் தான் பேசினேன். இந்தியா அதை, 50 சதவீதமாக குறைத்தது. இருந்தும், வெளிநாட்டு மோட்டார் சைக்கிளுக்கு, அமெரிக்கா, 2.4 சதவீதம் தான் வரி விதிக்கிறது. அமெரிக்க விஸ்கி இறக்குமதிக்கு, இந்தியா, 150 சதவீதம் வரி வசூலிக்கிறது. ஆனால், நாம் அவ்வாறு வரி விதிக்கவில்லை. இந்தியா, நியாயமற்ற முறையில் அதிக வரி விதிக்கிறது.
முன்னேறும் நாடுகள், வர்த்தகப் பாதுகாப்பு என்ற அரண் அமைத்து, நம் வேளாண் மற்றும் பிற பொருட்களின் விற்பனைக்கும் தடையாக உள்ளன. அவர்கள், நம்மை நல்லவர்கள் அல்லது அதி புத்திசாலிகள் அல்ல என்ற நினைப்பில் பல ஆண்டுகளாக இதை செய்து வருகின்றனர். இதற்கு, நாம் முடிவு காண வேண்டும். அவர்களில் பலர் நமக்கு நண்பர்கள்; கூட்டாளிகள்.
எனினும், அவர்கள், நம் கூட்டணியில் இல்லாத பிற நாடுகளை விட, நம்மிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கின்றனர். இந்த சட்டம் மூலம், இனி ஒரு நாடு விதிக்கும் அதே வரியை, அமெரிக்காவும் விதிக்க வழி ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|