பதிவு செய்த நாள்
25 ஜன2019
23:20

புதுடில்லி : ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், 1,489 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, சந்தையாளர்கள் கணித்த, 1,731 கோடி ரூபாயை விட குறைவாகும்.
இந்நிறுவனம், கடந்த நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 1,799 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.இதே காலத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாய், 0.71 சதவீதம் அதிகரித்து, 19 ஆயிரத்து, 528 கோடியில் இருந்து, 19 ஆயிரத்து, 668 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவும், சந்தையாளர்களின் கணிப்பான, 19 ஆயிரத்து, 712 கோடி ரூபாயை விட குறைவாகும்.இதே காலத்தில், நிறுவனத்தின் வாகன விற்பனை, 0.6 சதவீதம் குறைந்து, 4 லட்சத்து, 28 ஆயிரத்து, 643 ஆக சரிவடைந்து உள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:சந்தை நிலவரம் சரியில்லாததால், நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபம் குறைந்துள்ளது. குறிப்பாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவு, புதிய மாடல்கள் மற்றும் இன்ஜின்கள் அறிமுகத்தால் அதிகரித்த செலவினம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால், லாபம் குறைந்துள்ளது. விற்பனை வளர்ச்சி, மதிப்பீட்டு காலாண்டில், 0.4 சதவீதம்; மூன்று காலாண்டுகளில், 7.2 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு, பண்டிகை கால விற்பனையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று, மாருதி சுசூகி இந்தியா வெளியிட்ட காலாண்டு நிதி நிலை அறிக்கை, சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லாததால், மும்பை பங்குச் சந்தையில், அதன் பங்கு விலை, 8.௧௧ சதவீதம் அதிகமாக சரிவடைந்து, 6,469.90 ரூபாயில் நிலை கொண்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|