பதிவு செய்த நாள்
27 ஜன2019
00:28

புதுடில்லி: கடந்த வெள்ளியுடன் முடிந்த வாரத்தில், தங்கம் விலை உயர்ந்தும், வெள்ளி விலை சரிந்தும் காணப்பட்டது.அதேசமயம், சர்வதேச சந்தையில், வெள்ளி விலை அதிக ஏற்ற, இறக்கமின்றி இருந்தது. கடந்த வாரம், 1 அவுன்ஸ் தங்கம் விலை, 1,284 டாலராக அதிகரித்து காணப்பட்டது.இது, முந்தைய வாரத்தில், 1,282 டாலராக இருந்தது. இதே காலத்தில், வெள்ளி விலை, 15.41லிருந்து, 15.46 டாலராக அதிக ஏற்ற, இறக்கமின்றி காணப்பட்டது.டில்லியில், கடந்த வார மத்தியில், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 33 ஆயிரத்து, 325 ரூபாய் வரை உயர்ந்து இருந்தது. இது, வர்த்தக இறுதி நாளான, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 33 ஆயிரத்து, 300 ரூபாயாக குறைந்தது. எனினும், மொத்தத்தில், தங்கம் விலை, 140 ரூபாய் அதிகரித்துள்ளது.ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை, 25 ஆயிரத்து, 500 ரூபாயில் நிலைபெற்றது. வெள்ளி, 1 கிலோ, 40 ஆயிரத்து, 160 ரூபாய் வரை உயர்ந்த போதிலும், வார இறுதியில், முந்தைய வாரத்தை விட, 162 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்து, 36 ரூபாயில் நிலை பெற்றது.திருமண காலத்தை முன்னிட்டு தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள், நாணயம் தயாரிப்போரிடம் வெள்ளியின் தேவை குறைந்ததால், அதன் விலை சரிவடைந்துள்ளது என, சந்தையினர் தெரிவித்துள்ளனர்.சென்னையில், வெள்ளியன்று, 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 24 ஆயிரத்து, 712 ரூபாய்க்கு விற்பனையானது.குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று, தங்கம், வெள்ளி சந்தைக்கு விடுமுறை என்பதால், அவை செயல்படவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|