பதிவு செய்த நாள்
27 ஜன2019
00:30

தஞ்சாவூர், ஜன. 27–
பிளாஸ்டிக் தடை காரணமாக, ஓட்டல், சிற்றுண்டி கடைகளில், வாழை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாழைத் தார்கள்மற்றும் இலைகள் அனுப்பப்படுகின்றன.தமிழகத்தில், கடந்த, 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், சிற்றுண்டி உணவு விடுதிகளில், டிபன்களுக்கு பயன்படுத்தப்படும் பாலித்தீன் பேப்பருக்கும் தடை விதிக்கப்பட்டதால், தற்போது வாழை இலைகளை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.இது குறித்து, விவசாயி திருப்பூந்துருத்தி, சுகுமாறன் கூறியதாவது:முன்பெல்லாம் தினமும், 1,000 டிபன் இலைகளை வாங்கிய வியாபாரிகள், தற்போது, 3,000 வாழை இலைகளை வாங்குகின்றனர். அந்த அளவிற்கு வாழை இலைகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, டிபன் இலையை, 60 காசுக்கு கொள்முதல் செய்கின்றனர்; அதை 80 காசாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|