பதிவு செய்த நாள்
27 ஜன2019
00:31

புதுடில்லி: இந்திய வேளாண் பொருட்களில், நிர்ணயித்த அளவை விட, அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் உள்ளதால், அவற்றின் இறக்குமதியை, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் குறைக்கும் நிலை உருவாகியுள்ளது.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு, இந்தியா அதிக அளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.வெண்டைக்காய்இந்நிலையில், இந்தியவேளாண் பொருட்களில், அதிக அளவில், பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலப்பு இருப்பதாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகள், மத்திய அரசிடம் புகார் தெரிவித்துஉள்ளன.குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் வெண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றில், நிர்ணயித்ததை விட, கூடுதலாக நச்சுப் பொருட்கள் உள்ளதாக, அந்நாடுகள் கூறி உள்ளன.இந்நாடுகள், இந்திய உணவு பொருட்களின் உறையில், ‘பிராண்டு’ மற்றும் உள்ளிருக்கும் பொருளின் பெயர், அதன் மூலக்கூறு விபரங்களை அச்சிட வேண்டும் என, வலியுறுத்தியுள்ளன.மேலும், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் பொருட்கள் எனில், அது குறித்து, இந்திய வேளாண் மற்றும் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான, ‘அபிடா’வின் அங்கீகாரத்துடன், தரச் சான்றிதழை இணைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.தரச் சான்றுஇந்த விதிமுறைகளை பின்பற்றி, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தவறினால், இறக்குமதி குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளன.இது குறித்து, ‘அபிடா’ பொது மேலாளர், யு.கே.வாட்ஸ் கூறியதாவது:உணவு பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் விதிமுறைகளை பின்பற்றுமாறு, இந்திய வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இருந்தும், உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், இறக்குமதியை குறைத்துக் கொள்வோம் என, எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது, இந்நாடுகளைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளது. அதனால், வெண்டைக்காய், மிளகாய் மற்றும் இதர காய்கறிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களின் தரச் சான்றிதழ் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய பயிர் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளோம்.இந்த சான்றிதழ்களுடன் ஏற்றுமதியாகும் வேளாண் பொருட்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவை, இறக்குமதி செய்யப்படாமல் திரும்ப அனுப்பவும் வாய்ப்பில்லை. ஆகவே, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வோர், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முதலிடம்இந்தியா, ஆண்டுக்கு, 2.80 லட்சம் கோடி ரூபாய்க்கு, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதில், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் பங்கு, 9,100 கோடி ரூபாய்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இறக்குமதி செய்யும் உணவு பொருட்களில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் உணவு தேவையில், 20 சதவீதத்தை, இந்தியா பூர்த்தி செய்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|