நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள்நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள் ... தங்கம் விலை ரூ.104 சரிவு தங்கம் விலை ரூ.104 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீ­டு­கள் மீதான கடன் வச­தியை எப்­போது நாடு­வது ஏற்­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
00:23

கடன் பெற வேண்டிய சூழலில், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன்களை விட செலவு குறைந்த முதலீடுகள் மீதான கடன் வசதியை பரிசீலிக்கலாம்
வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் கடன் வழங்­கும் வேகம் அதி­க­ரித்­து இ­ருக்­கிறது. பல வங்­கி­கள் உட­னடி கடன் வச­தி­யை­யும் அளிக்­கின்­றன. முன் அனு­மதி பெற்ற கடன்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இவைத்­ த­விர கிரெ­டிட் கார்டு மீது கடன் பெறு­வ­தும் எளி­தாகி இருக்­கிறது.

ஆனால், கடன் பெறும் வசதி அதி­கம் இருப்­ப­த­னால் மட்­டும், விரும்­பிய போதெல்­லாம் கடன் வாங்­கு­வது சரி­யல்ல. பொது­வாக இந்த வகை கடன்­கள் ஈடு செய்­யப்­ப­டா­தவை என்­ப­தால் இவற்­றின் மீதான வட்டி விகி­த­மும் அதி­கம் என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும்.வீட்­டுக்­க­டன், சொத்­து­கள் மீது கடன் பெறு­வது போன்­றவை ஈடு செய்­யப்­பட்ட கட­னா­கும். இவற்­றுக்­கான வட்டி விகி­தம் குறைவு. இதே போல, முத­லீ­டு­கள் மீதும் கடன் பெறும் வசதி இருக்­கிறது.

கடன் அளவு

இவை லோன் எகைன்ஸ்ட் செக்­யூ­ரீட்­டிஸ் என குறிப்­பி­டப்­படு­கின்­றன. காப்­பீடு பாலி­சி­கள், மியூச்­சு­வல் பண்ட்­கள், நேரடி பங்­கு­கள், நிரந்­தர வரு­மான திட்­டங்­கள், ஈ.டி.எப்.,கள், சேமிப்பு பத்­தி­ரங்­கள் ஆகிய முத­லீ­டு­கள் மீது கடன் பெற வங்­கி­கள் அனு­ம­திக்­கின்­றன. இத்­த­கைய முத­லீ­டு­கள் உங்­கள் வசம் இருந்­தால், இவற்­றின் மீது கடன் பெற முடி­யும்.


முத­லீ­டு­கள் மீது கட­னாக வழங்­கும் தொகை வங்­கிக்கு வங்கி மாறு­ப­ட­லாம். இந்த கடன் ஓவர் டிராப்ட் வச­தி­யாக வழங்­கப்­ப­டு­கிறது. முத­லீட்டு சான்­றி­தழை அட­மா­னம் வைத்து கடன் பெறு­வ­தாக இதை புரிந்து கொள்­ள­லாம். ஒரு சில வங்­கி­கள் ஆன்­லை­னில் கடன் பெற­வும் அனு­ம­திக்­கின்­றன.

சம­பங்­கு­கள் மீது கடன் பெற

வேண்­டும் எனில் டிமெட் வடி­விலான கணக்கு வைத்­தி­ருக்க வேண்­டும். கட­னாக வழங்­கப்­படும் தொகை முத­லீட்­டின் அள­வுக்கு ஏற்ப அமை­யும். மியூச்­சு­வல் பண்ட் திட்­டம் எனில், என்.ஏ.வி எனப்­படும் அதன் நிகர சொத்து மதிப்­புக்கு ஏற்ப கடன் வழங்­கப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லான வங்­கி­கள் இந்த வகை கடன் வச­தியை அளிக்­கின்­றன. இவற்­றுக்­கான வட்டி விகி­தம், முத­லீட்­டின் தன்மை மற்­றும் வங்­கிக்கு ஏற்ப அமை­யும். ஸ்டேட் வங்கி, மியூச்­சு­வல் பண்ட், பங்­கு­கள் ஆகி­ய­வற்­றின் மீதான கட­னுக்கு, 10.95 சத­வீத வட்டி வசூ­லிக்­கிறது.

தங்க சேமிப்பு பத்­தி­ரங்­கள் மீதான கட­னுக்­கான வட்டி விகி­தம், 10.45 சத­வீ­த­மா­கும். வட்டி விகி­தம் தவிர, ஆண்டு பரா­ம­ரிப்பு கட்­ட­ணம், கிரெ­டிட் பீரோ கட்­ட­ணம், முத்­தி­ரைத்­தாள் கட்­ட­ணம் போன்­ற­வை­யும் பொருந்­தும்.

எப்­போது பெற­லாம்

பொது­வாக முத­லில் சேமித்து, அதன் பிறகே செலவு செய்ய வேண்­டும். சேமிக்­கும் தொகையை சரி­யாக முத­லீடு செய்ய வேண்­டும். முத­லீ­டு­கள் மீது கடன் பெறும் வசதி இருந்­தா­லும் அதை நாடு­வ­தில் கவ­னம் தேவை. கடன் பெறு­வது தவிர்க்க இய­லாது எனும் சூழ­லில் இந்த வாய்ப்பை பரி­சீ­லிக்­க­லாம். ஏனெ­னில், கிரெ­டிட் கார்டு கட­னுக்­கான வட்டி விகி­தம், 22 முதல், 44 சத­வீ­தம் வரை அமை­ய­லாம். தனி­ந­பர் கட­னுக்­கான வட்டி விகி­தம், 12 முதல், 22 சத­வீ­த­மாக அமை­ய­லாம்.

மாறாக, முத­லீடு கடன், 10 முதல் 14 சத­வீத வட்டி கொண்­டி­ருக்­க­லாம். மற்ற கடனை விட செலவு குறைந்­ததாக இருந்­தா­லும், இவற்றை திரும்­பிச் ­செ­லுத்த முறை­யான திட்­ட­மி­டல் தேவை. அப்­போது தான் கடனை முடித்து, முத­லீட்­டின் பலனை தொடர்ந்து பெற முடி­யும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)