பதிவு செய்த நாள்
07 பிப்2019
23:44
சேலம்:தமிழக மார்க்கெட்டுகளுக்கு, சுக்கு வரத்து சரிந்ததால், விலை கிலோவுக்கு, 60 ரூபாய் உயர்ந்தது.
மருத்துவ பொருளாகவும், சமையலுக்கும் பயன்படுத்தப்படும் சுக்கு, குளிர்பிரதேசங்கள், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து, தமிழக மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த வாரம் வரை, விருதுநகர், சென்னை, சேலம் – லீபஜாருக்கு, வாரத்துக்கு, 50 லாரிகளில் விற்பனைக்கு வந்த சுக்கு வரத்து, தற்போது, 10 லாரிகளாக சரிந்துள்ளது.இதனால், சுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை, கிலோவுக்கு, 60 ரூபாய் உயர்ந்தது.
கடந்த வாரம் வரை, சுக்கு முதல் தரம், கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற, 360 ரூபாய்; இரண்டாம் தரம், 240க்கு விற்றது, 300 ரூபாய்; மூன்றாம் தரம், 200க்கு விற்றது, 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|