‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம்‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை ... ... உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள் உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீடு செய்­யும் முன் செய்ய வேண்­டிய ஐந்து விஷ­யங்­கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
23:40

சீரான முத­லீட்­டின் அவ­சி­யத்தை யாரா­லும் மறுக்க முடி­யாது. முத­லீடு செய்­யும் போது, பல விஷ­யங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும் என்­பது போல, முத­லீடு செய்­வ­தற்­கு முன், கவ­னத்­தில் கொள்ள வேண்­டிய முக்­கிய விஷ­யங்­களும் இருக்­கின்­றன. முத­லீடு பாதை சீராக அமைந்து, எதிர்­கால வளத்தை நோக்கி முன்­னேற, இந்த விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­துங்­கள்:

இல்ல பட்­ஜெட்:

பல­ரும் முத­லீட்டை மேற்­கொள்­ளும் போது, பட்ஜெட்­டின் அரு­மையை உண­ரு­வ­தில்லை. குடும்ப செல­வுக்கு என்று முறை­யான பட்­ஜெட் இல்­லா­ம­லேயே, சேமிப்­பை­யும், முத­லீட்­டை­யும் துவக்­கு­கின்­ற­னர். ஆனால், இல்ல பட்­ஜெட்டை வகுத்­துக்­கொண்­டால், கையில் உள்ள உப­ரித்­தொகை தெளி­வாக தெரி­யும். செல­வு­களை குறைக்­க­வும் இது உத­வும்.

கடன் விடு­தலை:

முத­லீடு செய்­வ­தற்கு முன் எந்­த­வித கட­னும் இல்­லா­மல் இருப்­பது நல்­லது. கடன்­களை முழு­வ­தும் அடைக்க முடி­யா­விட்­டா­லும் அதற்­கான திட்­ட­மி­டல் இருக்க வேண்­டும். முக்­கி­ய­மாக, அதிக வட்டி விழுங்­கும் கிரெ­டிட் கார்டு கடன் போன்­ற­வற்றை பைசல் செய்ய வேண்­டும். வீட்­டுக்­க­டன் போன்­ற­வற்றை முன்­கூட்டியே அடைக்க திட்­ட­மி­ட­லாம்.

காப்­பீடு பாது­காப்பு:

காப்­பீடு பெறு­வ­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திக்­கொண்டே இருக்­க­லாம். ஒரு­வர் போது­மான ஆயுள் காப்­பீடு பாது­காப்பு பெற்­றி­ருக்க வேண்­டும். தனக்­கும், குடும்­பத்­திற்­கு­மான மருத்­துவ காப்­பீ­டும் அவ­சி­யம். இல்லை எனில், மருத்­துவ தேவைக்­காக முத­லீட்டு தொகை­யில் கைவைக்க வேண்டி வர­லாம்.

இலக்­கு­கள் எவை?:

முத­லீ­டு­கள் இலக்­கு­க­ளுக்கு ஏற்ப அமைந்­தி­ருப்­பது முக்­கி­யம். முத­லீடு செய்­யும் முன் இலக்­கு­களை அவற்­றுக்­கான இலக்­கு­களை தெளி­வாக வரை­யறை செய்து கொள்ள வேண்­டும். இலக்­கு­களை குறு­கிய, மத்­திய மற்­றும் நீண்­ட­கால இலக்­கு­கள் என பிரித்­துக்­கொண்டு அதற்­கேற்ப முத­லீடு செய்ய வேண்­டும்.

அவ­சர கால நிதி:

காப்­பீடு போலவே அவ­சர கால நிதியை உரு­வாக்கி கொள்­வ­தும் தவிர்க்க இய­லா­தது. ஆறு மாத கால அடிப்­படை செல­வு­க­ளுக்­கான தொகையே அவசர கால நிதி­யாக கொள்­ளப்­ப­டு­கிறது. இந்த வகை நிதி கைவ­சம் இருந்­தால், எதிர்­பா­ராத நெருக்­க­டி­க­ளின் போது கூட, முத­லீடு தொகை பாதிக்­கப்­ப­டா­மல் பார்த்­துக் ­கொள்­ள­லாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)