பங்குச் சந்தைபங்குச் சந்தை ...  ஓராண்டில் 40 லட்சம், ‘டீமேட்’ கணக்கு துவக்கி சாதனை மக்களிடம்  பங்குமுதலீட்டில் பெருகுது ஆர்வம் ஓராண்டில் 40 லட்சம், ‘டீமேட்’ கணக்கு துவக்கி சாதனை மக்களிடம் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆலோ­ச­னை­கள் நம்மை தேடி வராது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
00:05

‘சென்­செக்ஸ்’ குறி­யீட்­டின் சமீ­ப­கால நகர்­வு­கள், சந்­தை­யின் உண்மை நிலையை பிர­தி­ப­லிக்­க­வில்லை என்றே சொல்ல வேண்­டும்.

குறி­யீ­டு­கள் அதி­கம் விழாத சூழ­லில், தங்­கள் பங்­கு­கள் மிக பல­மான சரிவை காண்­பது, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வரு­கிறது. நேரடி பங்கு முத­லீடு செய்­யும் பெரும்­பா­லா­னோர், தங்­கள் போர்ட்­போ­லி­யோ­வின் சரி­வால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மியூ­சு­வல் பண்டு முத­லீ­டு­களும் எதிர்­பார்த்­த­படி அமை­யாத சூழ­லில், அடுத்து என்ன செய்­வது என்ற தவிப்பு, சந்­தை­யில் தெரி­கிறது.

முத­லீட்­டா­ளர்­கள், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பரஸ்­பர ஆலோ­ச­னை­களை வழங்கி, இந்த இக்­கட்­டான காலத்தை கடக்க முனை­கின்­ற­னர். ஆனால், இந்த ஆலோ­ச­னை­க­ளின் தரம் மிக­வும் முக்­கி­யம். அவை தர­மான ஆலோ­ச­னை­க­ளாக இருந்­தால், நன்மை ஏற்­படும். மாறாக, தரம் இல்­லா­மலோ, மேம்­போக்­கா­கவோ அமைந்­தால், பாதிப்­பு­களை மேலும் ஏற்­ப­டுத்­தும்.

கடி­ன­மான கால­கட்­டங்­களை கடந்து வெற்றி பெற, தர­மான எண்­ணங்­களும், முத­லீட்டு முடி­வு­களும் அத்­தி­யா­வ­சி­யம்.கடந்த காலம் எப்­படி அமைந்­தா­லும், எதிர்­கா­லத்தை சீர­மைத்­துக் கொள்ள, இவை வழி­வகுக்­கும். அத்­த­கைய எண்­ணங்­களும், ஆலோ­ச­னை­களும் தாமாக நம்மை தேடி வராது; அவற்றை அடை­யா­ளம் கண்டு, நாமாக நாடி சேர்ந்­த­டைய வேண்­டும். இதற்கு, பல தடை­கள் அமை­ய­லாம்.

முக்­கி­ய­மாக, முத­லீட்டு வெற்­றிக்கு சில கூடா நட்­பு­களும், சேராத சித்­தாந்­தங்­களும் பெரும் தடை­யாக அமை­யும். அவற்றை முழு­தும் தவிர்த்து, சரி­யான எண்­ணச் சூழ­லை­யும், சிந்­தனை போக்­கை­யும் ஏற்­ப­டுத்­திக் கொள்­வது, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை.இதை ஏற்­ப­டுத்­திக் கொள்­வது தனி நபர் பொறுப்பு. கடந்த காலத்­தின் தோல்­வி­களை கடந்து, எதிர்­கா­லத்தை நோக்கி உட­ன­டி­யாக நகர வேண்­டிய கட்­டா­யம், நம் அனை­வ­ருக்­கும் இருக்­கிறது.

முத­லீட்­டா­ளர்­க­ளான நம் வாழ்­வில் வெற்றி என்­பது, தோல்­வி­களை கடந்து சென்­றால் மட்­டுமே நம்மை வந்து அடை­யும். ஆனால், அது எளி­தல்ல. தோல்­வியை ஒப்­புக்­கொண்­டால் மட்­டுமே, நாம் முன்னே செல்ல முடி­யும்.

ஒப்­புக்­கொண்ட பின், அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்ற நகர்வை ஏற்­ப­டுத்­தும். இல்­லா­விட்­டால், ஒன்­றும் செய்­யா­மல் இருக்­கும் தேக்க நிலைக்கு, நம்மை நாமே தள்ளி விடு­வோம்.காலம் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்­கை­யில் காத்­தி­ருப்­பது, எந்த தீர்­வை­யும் தராது. மாறாக, நாள­டை­வில் நம் விரக்­தியை மிகைப்­ப­டுத்தி, சந்­தையை விட்டே வெளி­யே­றச் செய்­து­வி­டும்.

மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்­வது தான், நம் தற்­போ­தைய தேவை. அந்த மாற்­றம், எதிர்­கால வெற்­றிக்கு தேவை­யான சிந்­த­னை­க­ளை­யும், சேர்க்­கை­க­ளை­யும் ஏற்­ப­டுத்த வேண்­டும்.சந்தை மாறு­வ­தற்கு முன், நாம் மாறு­வது மட்­டுமே, நம்மை எதிர்­கா­லத்­திற்கு தயார்­ப­டுத்­தும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச்சந்தை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)