உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள்உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள் ... பங்குச்சந்தைகள் சரிவு - ரூபாயின் மதிப்பு உயர்வு பங்குச்சந்தைகள் சரிவு - ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பயன் தருமா வட்டி குறைப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
00:08

ஆர்.பி.ஐ., எனப்படும் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்­ன­ராக சக்­தி­காந்த தாஸ் வந்த பின், நடை­பெற்ற முதல் நிதிக் கொள்கை குழு­வின் சந்­திப்­புக்­கு பின், ‘ரெப்போ’ வட்டி விகி­தம் 0.25 சத­வீ­தம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. எந்த அடிப்­ப­டை­யில் இது செய்­யப்­பட்­டது? இத­னால், பொது­மக்­க­ளுக்­குப் பயன் உண்டா?

நிதிக் கொள்கை குழு சந்­திப்­ப­தற்கு முதல் நாள், நிடி ஆயோக்­கின் துணைத் தலை­வர் பேசும் போது, ‘ஆர்.பி.ஐ., வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் குறைக்­க­லாமே’ என்று தெரி­வித்­தார். மத்­திய அரசு இந்­தத் திசை­யில் செல்­லவே விரும்­பு­கிறது என்­பதை, குறிப்­பால் உணர்த்­து­வது போன்று இருந்­தது அவ­ரது கருத்து.

அதற்கு ஏற்­பவே, மறு­நாள் நடை­பெற்ற கூட்­ட­மும் முடி­வெ­டுத்­தது. 18 மாதங்­க­ளுக்­குப் பின், ரெப்போ வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

சமிக்ஞை

இதற்கு முன், உர்­ஜித் படேல் கவர்­ன­ராக இருந்த போது, ஆர்.பி.ஐ.,யின் நோக்­கம், நாட்­டின் நிதிப் பற்­றாக்­கு­றையை, 3 சத­வீ­தத்­துக்­குள் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­பதே. அதற்கேற்ப, உர்­ஜித் படேல், வட்டி விகி­தங்­களை இழுத்­துப் பிடித்து வந்­தார். தற்­போது, நிலைமை மாறி­யுள்­ளது.

இடைக்­கால பட்­ஜெட்­டி­லேயே மாற்­றத்­துக்­கான சமிக்ஞை தெரிந்­தது. இந்த ஆண்­டும், அடுத்த ஆண்டும் நம் நிதிப் பற்­றாக்­குறை, 3.4 சத­வீ­த­மாக இருக்­கும். அதன் பின், வரும் ஆண்­டு­களில், நிதிப் பற்­றாக்­கு­றை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று தெரி­வித்­தது இடைக்­கால பட்­ஜெட்.

இதன் அர்த்­தம் என்­ன­வெ­னில், இனி­மே­லும் வட்டி விகி­தத்தை இழுத்­துப் பிடித்து, பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முனைப்பு காட்­டப்­பட வேண்­டி­யது இல்லை. வளர்ச்­சி­யும், அதற்­குத் தேவை­யான பணப் புழக்­க­மும், அதை எளி­தாக்­கக்­கூ­டிய வங்­கிக் கடன்­களும் சுல­ப­மாக்­கப்­ப­ட­லாம் என்று பச்­சைக்­கொடி காட்­டப்­பட்­டது.

இதை­யொட்­டியே, ஆர்.பி.ஐ., 0.25 சத­வீத வட்டி குறைப்­பைச் செய்­துள்­ளது. இதற்கு இன்­னொரு கோண­மும் உண்டு.ஆர்.பி.ஐ., ரொம்­ப­வும் ஜாக்­கி­ர­தை­யான அமைப்பு. நாட்­டின் பொரு­ளா­தா­ரக் குறி­யீ­டு­கள் முன்­னேற்­றம் அடைந்­தால் தான், வட்டி விகி­தங்­க­ளைக் குறைக்க ஒப்­புக்­கொள்­ளும். முதன்­மு­றை­யாக தற்­போது தான் அது, வேறொரு அணு­கு­மு­றையை மேற்­கொண்­டுள்­ளது.

அதா­வது, முன்­னேற்­றத்­துக்­கான முகாந்­தி­ரம் தெரி­யும் நிலை­யி­லேயே வட்டி விகி­தத்­தைக் குறைத்­துள்­ளது.

முகாந்­தி­ரங்­கள் என்­ன?

டிசம்­பர், 2018ல், 18 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு சில்­லரை பண­வீக்­கம், 2.19 சத­வீ­த­மா­கக் குறைந்­துள்­ளது முதற்­கா­ர­ணம். அடுத்து, வரும் மாதங்­களில் இந்த நிலை தொட­ரும் என்ற நம்­பிக்கை.இரண்­டா­வது, மார்ச், 2019ல், நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.2 சத­வீ­த­மாக இருக்­கும் என்ற நம்­பிக்கை. மூன்­றாவது, வளர்ச்சி மேன்­மேலும் தொட­ரும் என்ற எதிர்­பார்ப்பு.இத்­த­கைய நம்­பிக்­கை­யும் எதிர்­பார்ப்­புமே, வட்டி விகி­தம், 0.25 சத­வீ­தம் குறைய கார­ண­மா­யிற்று.

முழு பலன்

இந்­தச் சலுகை, மக்­க­ளுக்­குப் போய் சேருமா? அடுத்த இரண்டு, மூன்று வாரங்­களில், வட்டி குறைப்­பின் பலன்­கள் பொது­மக்­க­ளுக்கு மாற்­றித் தரப்­ப­டு­வ­தற்கு, தான் முயற்சி எடுக்­க­வி­ருப்­ப­தாக, சக்­தி­காந்த தாஸ் தெரி­வித்­தார்.

பொது­வாக, முழுப்­ப­ல­னும் பொது­மக்­க­ளுக்­குப் போய் சேரு­வ­தில்லை என்­பது தான் உண்மை.இதற்கு நியா­ய­மான கார­ணங்­கள் இல்­லா­மல் இல்லை. பல பொதுத் துறை வங்­கி­கள், வாராக்­கடன் பிரச்­னை­யில் சிக்­கிக்­கொண்டு இருக்­கின்­றன. மேலும், ஒவ்­வொரு காலாண்­டும், அவை எதிர்­வ­ரும் புது வாராக்­க­டன்­க­ளைச் சமா­ளிக்க, போதிய நிதி ஒதுக்­கீ­டு­க­ளைச் செய்து வைக்க வேண்­டி­யது கட்­டா­யம்.

இன்­னொ­ரு­பு­றம், வங்­கி­யல்­லாத நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குக் கொடுத்த கடன்­களும் படிப்­ப­டி­யாக மோச­மாகி வரு­வ­தால், பொதுத் துறை வங்­கி­களில் போதிய நிதி­யா­தா­ரங்­கள் இல்லை.வீட்­டுக் கடன், வாக­னக் கடன் போன்ற கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தத்­தைக் குறைக்க வேண்­டு­மென்­றால், சேமிப்­பு­க­ளுக்­கான வட்டி விகி­தத்­தைக் குறைக்க வேண்­டும்.

பொதுத் துறை வங்­கி­களை விட தனி­யார் வங்­கி­க­ளி­லும், சிறு வங்­கி­க­ளி­லும் வட்டி அதி­கம் என்­ப­தால், மக்­கள் தங்கள் சேமிப்­பு­களை அங்கே போடு­கின்­ற­னர். சேமிப்­பு­க­ளுக்­கான வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­பட்­டால், மக்­கள் இன்­னும் அதி­க­ள­வில் வெளி­யே­று­வது நிச்­ச­யம். அத­னால், இந்த, ‘ரிஸ்க்கை’ பொதுத் துறை வங்­கி­கள் எடுக்­காது.

அதே­ச­ம­யம் மக்­கள், தேசிய வங்­கி­களில் கடன் வாங்­கு­வ­தும் பெரு­கி­யி­ருக்­கிறது. சேமிப்­பு­கள் இல்­லா­மல் கடன் கொடுக்க முடி­யாது. அத­னா­லும், வட்டி விகி­தங்­கள் உட­ன­டி­யாக குறைக்­கப்­ப­டாது.கடந்த ஓராண்­டில், தனி­யார் வங்­கி­க­ளி­டம் மக்­கள் கடன் வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது. கடன் வளர்ச்சி, 14 – 15 சத­வீ­தம் அள­வுக்கு இருக்­கிறது.

அவர்­க­ளுக்கு வரும் சேமிப்­பு­களோ, ஒற்றை இலக்­கத்­தி­லேயே இருக்­கின்­றன. சேமிப்­பு­க­ளைக் கூடு­த­லாக்க, அவர்­கள் பொதுத் துறை வங்­கி­களை விட கூடு­தல் வட்டி கொடுக்­கத் துவங்­கி­விட்­ட­னர்.இந்­நி­லை­யில், இவர்­கள் சேமிப்­பு­க­ளுக்­கான வட்­டியை குறைக்க மாட்­டார்­கள்.வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கூடு­தல் வட்டி கொடுப்­ப­தா­லேயே, இவர்­கள், கட­னுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்­க­வும் மாட்­டார்­கள். கட­னுக்­கும், சேமிப்­புக்­கு­மான இடை­வெளி தான் இவர்­க­ளது லாபம். அந்த லாபம் குறை­வதை, தனி­யார் வங்­கி­கள் அனு­ம­திக்­காது.

ஏட்­ட­ள­வில்…

அரசு தரப்­பில் இருந்து அழுத்­தம் இருக்­கு­மா­னால், ஒரு­சில பொதுத் துறை வங்­கி­கள், கட­னுக்­கான வட்­டியை லேசா­கக் குறைக்­க­லாம்.அப்­ப­டித்­தான், எஸ்.பி.ஐ.,யும், பேங்க் ஆப் மஹா­ராஷ்­டி­ரா­வும், 0.05 சத­வீ­தம் குறைத்­தி­ருக்­கின்­றன. தற்­போது, எஸ்.பி.ஐ.,யின், 30 லட்­சம் ரூபாய் வரைக்­கு­மான வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி, 8.70 சத­வீ­த­மா­கக் குறைந்­துள்­ளது.இது, புதுக் கட­னுக்­கான வட்டி. ஏற்­க­னவே கடன் வாங்­கி­ய­வர்­க­ளுக்­கான வட்டி விகி­தம், தற்­போது குறை­யாது.

எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யி­லேயே வட்டி விகி­தம் மாற்றி அமைக்­கப்­ப­டு­கிறது. அது ஆறு மாதத்­துக்கு ஒரு முறையோ, ஓராண்­டுக்கு ஒரு முறையோ திருத்­தப்­படும். உங்­கள் வங்­கி­யின் திட்­டத்­துக்கு ஏற்ப, அடுத்த முறை திருத்­தம் வரும் போது தான், வட்டி விகித குறைப்­புக்­கான பலன் உங்­க­ளுக்­குக் கிடைக்­கும்.‘சாமி வரம் கொடுத்­தா­லும், பூசாரி வரம் கொடுக்க மாட்­டார்’ என்­றொரு முது­மொழி உண்டு. அதற்கு நேரடி உதா­ர­ணம், இந்­த, 0.25 சத­வீத வட்டி குறைப்பு தான். இது, ஏட்­ட­ள­வில் மட்­டுமே இருக்­கப் போகிறது.

--ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)