பதிவு செய்த நாள்
13 பிப்2019
23:46

சென்னை:தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனம், 2017 – 18ம் ஆண்டில், 3.54 லட்சம் மெட்ரிக் டன் காகித உற்பத்தி செய்துள்ளது. 1 டன் காகித உற்பத்திக்கு, 13 ஆயிரம் லிட்டர் நீர் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் 2017 –18ம் ஆண்டுக்கான அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இதில், ஆண்டறிக்கையின் மீதான, தமிழக அரசின் ஆய்வறிக்கை விபரம்:
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தற்போது அச்சுத்தாள் மற்றும் எழுதுதாள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. 2017 – 18ம் ஆண்டில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 959 மெட்ரிக் டன், காகித உற்பத்தி செய்துள்ளது.மேலும், பேக்கேஜிங் காகித அட்டை, 1 லட்சத்து 41 ஆயிரத்து, 851 மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளது.
இந்த ஆண்டில், நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு, 80 ஆயிரத்து, 822 மெட்ரிக் டன். இது தவிர, 2017 –18ம் நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த கடன், 397.84 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய நஷ்டம் 42.15 கோடி ரூபாய்.நிறுவனத்தின் காடுமயமாக்கல் மற்றும் தாவரம் நடும் திட்டத்தின் கீழ், 27 மாவட்டங்களில், 1.24 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, 24 ஆயிரத்து 179 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், 1 டன் காகித உற்பத்திக்கான நீரின் பயன்பாடு, 40 ஆயிரம் லிட்டர் என்ற அளவு, 27 ஆயிரம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.இது காகித உற்பத்தி தொழிற்சாலைகளில், மிக குறைந்த அளவு. மேலும், 'எரி சாம்பல் பயன்பாடு 2018 விருது, 'நீர் நிர்வாக விருது' உள்ளிட்ட சில விருதுகளை, நிறுவனம் பெற்றுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|