‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை ...  மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு ...
உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
23:52

மும்பை:சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­திய எண்­ணெய் கழி­வில் இருந்து தயா­ரிக்­கும் உயிரி எரி­பொ­ருளை, உயிரி டீச­லில் கலக்க வேண்­டும் என்­பதை கட்­டா­ய­மாக்­கு­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

மத்­திய அரசு, கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செலவை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கில், பெட்­ரோல், டீச­லில், உயிரி எரிபொ­ருள் கலப்­பதை ஊக்­கு­விக்­கிறது.தற்­போது, பெட்­ரோ­லில், சர்க்­கரை ஆலை­களில் தயா­ரிக்­கப்­படும், உயிரி எரி­பொ­ரு­ளான எத்­த­னால், 3 -– 5 சத­வீ­தம் கலக்­கப்­ப­டு­கிறது.

எத்தனால்

இதை, 2022ல், 10 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், எத்­த­னால் உற்­பத்தி போது­மான அள­விற்கு இல்­லா­த­தால், மாற்று உயிரி எரி­பொ­ருள் பயன்­பாடு குறித்து ஆரா­யப்­ப­டு­கிறது.இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரி­யா நாட்டைச் சேர்ந்த, முன்­சர் பாரத் நிறு­வ­னம், மஹா­ராஷ்­டிரா மாநி­லம், நவி மும்பை அருகே, நெருல் என்ற இடத்­தில், சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­திய பின் சேக­ர­மா­கும் எண்­ணெய் கழிவு மூலம் உயிரி எரி­பொ­ருள் தயா­ரிக்­கும் தொழிற்­சா­லையை அமைத்­துள்­ளது.

இங்கு, மத்­திய பெட்­ரோ­லிய துறை அமைச்­சர், தர்­மேந்­திர பிர­தான். உயிரி எரி­பொ­ருள் உற்­பத்­தியை துவக்கி வைத்து பேசி­ய­தா­வது:வரும், 2030ல், டீச­லு­டன், 5 சத­வீ­தம் உயிரி டீசல் கலப்­பதை கட்­டா­ய­மாக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், உயிரி எரி­பொ­ருள் தயா­ரிப்­ப­தற்­கான மூலப் பொருட்­கள் கிடைப்­பது சவா­லாக உள்­ளது.

இந்­நி­லை­யில்,சமை­யல் எண்­ணெய் கழி­வில் இருந்து,உயி­ரி எ­ரி­பொ­ருள் தயா­ரிக்­கும் தொழில் ­நுட்­பம் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இது, உயிரி எரி­பொ­ரு­ளுக்­கான மூலப்­பொ­ருட்­கள் பற்­றாக்­கு­றையை ஓர­ளவு சமா­ளிக்க உத­வும்.

பரிசீலனை

சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­திய எண்­ணெய் கழி­வின் நச்­சுத்­தன்மை குறித்து தெரி­யும். அதே ச­ம­யம், அதை, உயிரி டீச­லுக்­கான மூலப்­பொ­ரு­ளாக பயன்­ ப­டுத்த முடி­யும் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.ஆகவே, சமை­யல் எண்­ணெய் கழி­வில் இருந்து பெறப்­படும் உயி­ரி­ எ­ரி­பொ­ருளை, மேம்­ப­டுத்­தப்­பட்ட உயி­ரி­ எ­ரி­பொ­ரு­ளாக வகை­ப­டுத்தி, உயிரி டீச­லு­டன் கலப்­பதை கட்­டா­ய­மாக்­க­லாம். இது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

ஐரோப்­பிய நாடு­களில், சமைக்­கப்­பட்ட எண்­ணெய் பயன்­பாடு குறித்த விதி­மு­றை­கள் உள்ளன. அவற்றை, நம் ­நாட்­டி­லும் அமல்­ப­டுத்­து­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும். இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூலம், உயி­ரி ­டீ­சல் தயா­ரிப்­பிற்கு, 20 லட்­சம் டன் சமை­யல் எண்­ணெய் கழிவு கிடைக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது, மத்­திய அரசு, மேம்­ப­டுத்­தப்­பட்ட உயிரி எரி­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளி­டம், 100 சத­வீத கொள்­மு­த­லுக்கு, உறுதி அளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சமை­யல் எண்­ணெய் கழி­வில் தயா­ரிக்­கும் உயி­ரி­எ­ரி­பொ­ரு­ளுக்கு, மேம்­ப­டுத்­தப்­பட்ட உயி­ரி­ எ­ரி­பொ­ருள் அந்­தஸ்து வழங்­கப்­படும் பட்­சத்­தில், கலப்பு எரி­பொ­ருள் இலக்கு எட்­டப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)