உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள்  புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய ... ...  மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் துறைக்கு, ஜி.எஸ்.டி., குறைகிறது: கடன் வசதியை அதிகரிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
23:22

புதுடில்லி:‘‘ரியல் எஸ்டேட் துறைக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் வரி, விரைவில் குறைக்கப்படும்,’’ என, மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


அவர், டில்லியில், ‘கிரெடய்’ அமைப்பின் வீட்டு வசதி கண்காட்சியை துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது:சமீபத்தில் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.அப்போது, கட்டுமானத்தில் உள்ள, குடியிருப்புகளுக்கான, ஜி.எஸ்.டி.,யை, தற்போதைய, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.


அத்துடன், குறைந்த விலை வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி., உள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்களுக்கு, உள்ளீட்டு வரி சலுகை வழங்கப்படுகிறது.அதுபோல, கட்டுமான பணி முடிவடைந்த குடியிருப்புகளை, பணி முடிவு சான்றிதழ் இன்றி விற்பனை செய்யும் போதும், கட்டுமான நிறுவனங்கள், உள்ளீட்டு வரி சலுகையை பெறுகின்றன.


புகார்


இவ்வாறு, கட்டுமான நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை, திரும்பப் பெற்றாலும், அந்த பயனை, வீடு வாங்குவோருக்கு வழங்குவதில்லை என, புகார் கூறப்படுகிறது.பணி முடிப்பு சான்றிதழுடன், குடியிருப்புகள் விற்கப்படும் போது, அவற்றை வாங்குவோர், ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை.


அப்படி இருந்தும், வீடு வாங்குவோரிடம், ஜி.எஸ்.டி., வசூலிப்பதாக கூறப்படுகிறது.இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண, ரியல் எஸ்டேட் துறைக்கு என, ஜி.எஸ்.டி., நிர்ணய திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதை, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைத்த, மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு உருவாக்கி வருகிறது.


இக்குழுவின் பரிந்துரை குறித்து, வரும், 20ம் தேதி நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். மந்தநிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க, விரைவில், ஜி.எஸ்.டி., குறைக்கப்படும். மேலும், இத்துறையினரின் கட்டுமான திட்டங்கள் தொடர்பான கடன் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்யுமாறு, வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


ஆலோசனை கூட்டம்


ரியல் எஸ்டேட் துறைக்கு, கடன் வசதியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்குமாறு, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்த அம்சங்கள் தொடர்பாகவும், வங்கி துறையில், கட்டுமான துறையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு, இந்திய வங்கிகள் கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அடுத்த இரு வாரங்களுக்குள், ரியல் எஸ்டேட் துறை பிரதிநிதிகளுடன், வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர். இதில், ரியல் எஸ்டேட் துறையின் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அரசு மற்றும் வங்கிகள் எடுக்கும் நடவடிக்கைகளால், ரியல் எஸ்டேட் துறையுடன், வீடு வாங்குவோரும் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)