உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள்  புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய ... ...  மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு மிளகு விலை தொடர்ந்துஇறக்குமதியால் மேலும் பாதிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொத்த விலை பணவீக்கம் 10 மாதங்களில் காணாத சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
23:27

புதுடில்லி:கடந்த ஜனவரியில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2.76 சதவீதமாக சரிவடைந்துள்ளது.


இது, 2018 ஜனவரி மற்றும் டிசம்பரில், முறையே, 3.02 சதவீதம் மற்றும் 3.80 சதவீதமாக இருந்தது. மார்ச்சில், 2.74 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக காணப்பட்டது.எரிபொருள் விலை குறைவும், வெங்காயம், உருளை, பழங்கள், பால் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் விலையில் ஏற்பட்ட சரிவும், மொத்த விலை பணவீக்க வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.


எரிபொருள் மற்றும் மின்சார துறையின் மொத்த விலை பணவீக்கம், 1.85 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 8.38 சதவீதமாக உயர்ந்து இருந்தது.சர்க்கரை, ஆயத்த ஆடை உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ள போதிலும், தயாரிப்பு பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.


எனினும், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 2.34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 0.07 சதவீதம் பின்னடைவில் இருந்தது.கடந்த, ஜனவரியில், சில்லரை பணவீக்கம், 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2.05 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)