இன்ஜி., மாணவர்களுக்கு புதிய, ‘ஆப்’ பணிக்கு தயார்படுத்தும், ‘இன்போசிஸ்’ இன்ஜி., மாணவர்களுக்கு புதிய, ‘ஆப்’ பணிக்கு தயார்படுத்தும், ‘இன்போசிஸ்’ ...  முதலீடுகளில் முடிவெடுக்க மூன்று அம்சங்கள் முக்கியம் முதலீடுகளில் முடிவெடுக்க மூன்று அம்சங்கள் முக்கியம் ...
யெஸ் பேங்க் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
23:54

புதுடில்லி: ரகசியமாக பராமரிக்க வேண்டிய அறிக்கையை, பகிரங்கமாக வெளியிட்டு, முதலீட்டாளர்களை திசை திருப்பிய விவகாரத்தில், யெஸ் பேங்க் மீது, ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தனியார் துறையில், நான்காவது பெரிய வங்கியாக, யெஸ் பேங்க் திகழ்கிறது. இவ்வங்கியும், ஆக்சிஸ் வங்கியும், 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, வாராக் கடனில் சேர்க்காமல், இடர்ப்பாட்டு கடனாக காட்டி வந்ததை, ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு கண்டுபிடித்தது.இதையடுத்து, யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி, ராணா கபூர், ஆக்சிஸ் பேங்க் வங்கி நிர்வாக இயக்குனர், ஷிகா சர்மா ஆகியோரின் பதவி நீட்டிப்பிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.அதனால், ராணா கபூர், கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றார். புதிய தலைமை செயல் அதிகாரியாக, ரவ்நீத் சிங் கில், தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.இவர், மார்ச், 1ல் பதவியேற்க உள்ளார். அதுவரை, இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக, அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.விலை உயர்வுஇந்நிலையில், சில தினங்களுக்கு முன், யெஸ் வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டது.அதில், வங்கியின், 2017 – -18ம் நிதியாண்டு நிதி நிலை அறிக்கையை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, ‘சொத்து வகை மற்றும் ஒதுக்கீட்டில் எவ்விதமான முரண்களும் இல்லை’ என, சான்றளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தகவல் வெளியானதை அடுத்து, யெஸ் பேங்க் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.இதன் காரணமாக, ஓராண்டாக, சாதகமற்ற செய்திகளால் சரிவடைந்து வந்த, யெஸ் பேங்க் பங்கு விலை, கடந்த வியாழனன்று, 30 சதவீதம் அதிகரித்தது.இது, ரிசர்வ் வங்கிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடர்ப்பாட்டு மதிப்பீட்டு அறிக்கையை முழுமையாக வெளியிடாமல், தனக்கு சாதகமான அம்சத்தை மட்டும் யெஸ் பேங்க் வெளியிட்டது தான், அதிர்ச்சிக்கு காரணம்.அந்த அறிக்கையில், சொத்துக்களை வகைப்படுத்தி, ஒதுக்கீடு செய்ததில் தான், முரண்பாடுகள் இல்லை என, கூறப்பட்டிருந்ததே தவிர, சரிவர செயல்படாத வங்கி நிர்வாகம், பல வகைகளில் நடைபெற்ற விதிமீறல்கள் உள்ளிட்ட அம்சங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.கண்டனம்அத்தகைய பாதகமான அம்சங்களை மறைத்து தனக்கு சாதகமான அம்சத்தை மட்டும் வெளியிட்ட, யெஸ் பேங்கிற்கு, ரிசர்வ் வங்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.ரகசியமாக பராமரிக்க வேண்டிய அறிக்கையை வெளியிட்டதுடன், திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழி நடத்தியதாக, ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்க் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.இதையடுத்து, தன் தவறை ஒப்புக் கொண்ட யெஸ் பேங்க், வெள்ளியன்று, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பிற்கு அறிக்கை அனுப்பிஉள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையில், முரண்கள் எதுவும் இல்லை என்பதை சாதனையாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்க கூடாது. அது, வருவாய் மற்றும் சொத்து அங்கீகாரத்திற்கான, வங்கியின் சாதாரண நடைமுறையில் ஒன்று தான்.யெஸ் பேங்க் செயல்பாடுகளில், பல்வேறு குறைபாடுகளை, ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.அவற்றை வெளியிடாமல், திட்டமிட்டு பொதுமக்களை தவறாக திசை திருப்பும் வகையில் அறிக்கை அமைந்துஉள்ளது. இதற்கு, எத்தகைய நடவடிக்கையையும், ரிசர்வ் வங்கி எடுக்கலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இவ்விவகாரத்தில், யெஸ் பேங்க் மீது, ரிசர்வ் வங்கி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, தெரிகிறது. இது, நாளை, பங்குச் சந்தையில், யெஸ் பேங்க் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதிகம் – குறைவுகடந்த ஓராண்டில், மும்பை பங்குச் சந்தையில், யெஸ் பேங்க் பங்கு விலை, அதிகப்பட்சமாக, 404 ரூபாய்; குறைந்தபட்சமாக, 147 ரூபாய் வரை சென்றது. கடந்த வார இறுதியில், இப்பங்கின் விலை, 217.45 ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)