முதலீடுகளில் முடிவெடுக்க மூன்று அம்சங்கள் முக்கியம் முதலீடுகளில் முடிவெடுக்க மூன்று அம்சங்கள் முக்கியம் ... பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு  வீழ்ச்சி பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ...
எப்படி இருக்கும் 2019 சம்பள உயர்வு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
06:57

ஒவ்வொரு ஆண்டும், நம் கவனத்தைக் கவர்வது, சம்பள உயர்வு தான். 2019ல் சம்பள உயர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?பொதுவாக, தனியார் நிறுவனங்களில், ஏப்., 1 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும். முந்தைய ஆண்டில், பணியாளர்கள் செய்த பங்களிப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ அளிக்கப்படும்.தொழில் சார்ந்த துறைகளில், சம்பள உயர்வு, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருக்கும். ஆனால், இதில் இருந்து வித்தியாசமானது, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பத் துறை. இது, அடிப்படையில் சேவைத் துறை.இத்துறையில் உள்நாட்டை விட, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம். அதனால், அன்னிய செலாவணி வரவும் அதிகம். பல முன்னணி, ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, பெருமளவு வர்த்தகம் ஆகி வருகின்றன.நம்பிக்கைஅத்தகைய நிறுவனங்கள் தான், தொடர்ச்சியாக சம்பள உயர்வு பற்றிய நம்பிக்கையை விதைத்து வருகின்றன. அடிப்படை உற்பத்தி சார்ந்த துறைகளில் என்னவிதமான சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை, ஐ.டி., துறையின் சம்பள வளர்ச்சி ஓரளவுக்கு சுட்டிக் காட்டும்.ஐ.டி., துறையின் சம்பள வளர்ச்சி என்பது, இந்திய நிறுவனங்களின் ஆரோக்கியத்தின் அடையாளம்; திறமைகளை மதிப்பதற்கான அங்கீகாரம்; வெளிப்படைத் தன்மையின் திசைகாட்டி.கடந்த ஆண்டு, 6 – 8 சதவீத அளவிற்கே சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஐ.டி., துறைக்குள்ளேயே பல்வேறு துணைப் பிரிவுகளில் ஒருவித சுணக்கம்.சர்வதேச அளவில் வருவாய் பெருகியதற்கான மகிழ்ச்சி இல்லை. அதனால், பல நிறுவனங்கள் பெரிய அளவில் சம்பள உயர்வு வழங்கவில்லை.அதேபோல், ‘கேம்பஸ்’ நேர்காணல்கள் அதிக அளவில் நடைபெறவில்லை. அவற்றில் தேர்வானவர்களை, விரைவில் பணிக்கு அழைத்து அமர்த்துவதிலும், தாமதம் ஏற்பட்டது.செயற்கை நுண்ணறிவுஇந்தச் சுணக்கம், தொய்வு எல்லாம் இந்தாண்டு இருக்காது என்றே, ‘நாஸ்காம்’ என்ற தகவல் தொழில்நுட்பத் துறையின் அகில இந்திய அமைப்பு கருதுகிறது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன.முக்கியமாக, இந்த ஆண்டு, 8 – 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம். அதுவும், ஒருசில குறிப்பிட்ட திறன்களை நன்கு பெற்றவர்களுக்கு, 20 சதவீத சம்பள உயர்வு கூட வழங்கப்படலாம்.செயற்கை நுண்ணறிவு, ‘சைபர்’ பாதுகாப்பு, ‘பிளாக்செயின்’ போன்ற புதிய துறைகளில் நிரம்பத் திறமை பெற்றவர்களுக்கு, சம்பள உயர்வு கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.கடந்த ஓராண்டில், ஐ.டி., மற்றும் அது சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது.கடந்த ஆண்டை விட, பல நிறுவனங்கள் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன. இந்நிலையில், 10 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு கொடுக்க, அவை தயாராகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.ஆர்வம்அதுபோல, பல நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதிலும், இம்முறை அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.உதாரணமாக, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், ஐ.டி., நிறுவனங்களில் முன்னோடியான, ‘இன்போசிஸ்’ 55 ஆயிரம் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ளது.கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 44 ஆயிரம் புதிய ஊழியர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தது.சர்வதேச அளவிலும் இதே போன்ற ஆர்வம் நிலவுவதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இன்றைய நவீன தேவைகளுக்கு ஏற்ப திறன்களை பணியாளர்கள் பெற்றிருந்தால், அவர்களுக்கான சம்பளம் ஒரு பொருட்டே இல்லை.ஒவ்வொரு நிறுவனமும், சம்பள வளர்ச்சிக்கு என்று ஒதுக்கி வைத்துள்ள நிதியில், 40 சதவீதத்தை, மிகத் திறமையாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்க இருக்கின்றன.இதன் மூலம், தனித்திறன் பெற்றவர்களுக்கு, 12 – 20 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கும். சாதாரண பணியாளருக்கு, 8 சதவீத உயர்வு இருக்கும் என, இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.பல ஆய்வுகள் தெரிவிக்கும் நம்பிக்கை, இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டவை. சாதாரண தேவைகள் இனி இல்லை. தனித்திறன்கள் தேவை. அதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்; போதிய சம்பளம் வழங்குகிறோம் என்பது ஒன்று.இரண்டு, கூடுதல் சம்பளம் கொடுத்து நல்ல பணியாளர்களை வைத்துக் கொள்வதன் மூலமே, சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.தளிர்களே அத்தாட்சிஐ.டி., பொருட்கள் மற்றும் ஐ.டி., சேவைகள் வழங்கும் துறைகளின் சம்பள உயர்வை, இவ்வளவு கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?இத்துறை கூடுதல் சம்பளம் கொடுக்குமானால், ஒருவித வளர்ச்சி, சுபிட்சம் ஆகியவை உலக அளவில் ஏற்பட்டிருக்கிறது என, அர்த்தம். சம்பளம் என்பது ஒரு வகையில் முதலீடு. நல்ல திறமையாளர்களை, தனித்தன்மை உள்ளவர்களை தம்மோடு வைத்துக் கொள்வதற்கு நிறுவனங்கள் செய்யும் முதலீடு இது. இதைச் செய்யவே கடந்த ஆண்டுகளில் பல நிறுவனங்கள் தயங்கின. தற்போது நிலைமை மாறியுள்ளதையே, இத்தகைய நம்பிக்கையளிக்கும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. செடி வளருகிறது என்பதற்கு, கிளைகளின் முனையில் தெரியும் தளிர்களே அத்தாட்சி.அதுபோல், இந்திய தொழில் நிறுவனங்களும், சேவை நிறுவனங்களும் சுபிட்சம் என்ற உணர்வை அடைந்திருக்கின்றனவா என்பதை புரிந்துகொள்ள, ஐ.டி., சம்பள உயர்வு ஒரு தளிர்.பெரிய தொழில் நிறுவனங்கள், தேவைப்படும் தொழில் முதலீடுகளை செய்யவும், புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும், சம்பள உயர்வு ஒரு அளவுமானி. அந்த வகையிலும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவே, 10 சதவீத சம்பள உயர்வை புரிந்து கொள்ள வேண்டும்.இன்னொரு வகையாகவும் புரிந்து கொள்ளலாம். இருக்கும் வேலைகள் காப்பாற்றப்பட்டு உள்ளன; அவை நீக்கப்படவில்லை. முழு நேர வேலைக்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. அதை நிறுவனங்கள் உணர்ந்து கொண்டுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.பணியாளர்கள் தான் தொழிலகங்களுக்கான முதுகெலும்பு. அவர்களின் பங்களிப்பிற்கு, இந்த ஆண்டு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றே நம்பலாம்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்ஒவ்வொரு நிறுவனமும், சம்பள வளர்ச்சிக்கு என்று ஒதுக்கி வைத்துள்ள நிதியில், 40 சதவீதத்தை, மிகத் திறமையாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கவிருக்கின்றன. இதன் மூலம், தனித்திறன் பெற்றவர்களுக்கு, 12 – 20 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கும். சாதாரண பணியாளருக்கு, 8 சதவீத உயர்வு இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 18,2019
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)