பதிவு செய்த நாள்
19 பிப்2019
06:49

மகிந்திரா நிறுவனம், ஏற்கனவே, ‘ஸ்கார்ப்பியோ, மராஸ்ஸோ’ உள்ளிட்ட எக்ஸ்.யூ.வி., கார்களின் அறிமுகத்தால் நன்மதிப்பை பெற்றுள்ளது.
தற்போது, ‘எக்ஸ்.யூ.வி., 300’ என்ற, புதிய மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.இதை, மகிந்திரா நிறுவனத்தின் தலைவர், ஆனந்த் மகிந்திரா, மேலாண் இயக்குனர் பவன் கோயங்கா, வாகன பிரிவு தலைவர் ராஜன் வதேரா ஆகியோர், பிப்., 14ம் தேதி, மும்பையில் அறிமுகப்படுத்தினர்.
பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு பிரிவுகளிலும், ‘எக்ஸ்.யூ.வி., 300’ அறிமுகமாகி உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ள காரின் விலை, 7.90 லட்சம் ரூபாயாகவும், 1.5 லிட்டர், டீசல் இன்ஜின் காரின் விலை, 8.49 லட்சம் ரூபாயாகவும், நிர்ணயிக்கப் பட்டுள்ளது. போர்டு நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட், மாருதி – சுசூகியின் விட்டாரா பிரெஸ்ஸா, டாடா மோட்டார்சின் நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு இந்த கார் விற்பனையில் கடும் போட்டியாக இருக்கும்.
டிவோலி காரில் உள்ளதை போன்ற பினிஷிங் கொடுப்பதற்காகவே, சாங்யாங் நிறுவனத்துடன், மகிந்திரா நிறுவனம் கூட்டு வைத்துள்ளது.சிறுத்தையின் கண்களை ஒத்து, முன், பின் பக்க, முகப்பு விளக்குகள் உள்ளன.ஸ்டியரிங் வீல், டுயல் டோன், கிளைமேட் கன்ட்ரோல், காரின் உட்புற லெதர், டேஷ்போர்டு என, ஒவ்வொன்றிலும் தனித்தன்மை மிளிர்கிறது.
ஸ்டியரிங்கில், கம்போர்ட், நார்மல், ஸ்போர்ட் என, மூன்று மோடுகள் உள்ளதோடு, தானியங்கி முகப்பு விளக்கு மற்றும் வைப்பர், பார்க்கிங் சென்சார், ஏழு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக் என, பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துஉள்ளன.அத்துடன், கண்களை கவரும் வகையில், ஆரஞ்சு, சிவப்பு, வெளிர் சாம்பல், கறுப்பு, கடல்நீலம் உள்ளிட்ட, வண்ணங்களில் இவை வெளிவந்து உள்ளன.பாதுகாப்பு, தோற்றம், வண்ணங்களில் தனித்த தன்மையுடன் உள்ளது இந்த கார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|