பதிவு செய்த நாள்
19 பிப்2019
06:50
சென்னை : எல்.ஐ.சி., நிறுவனம், ’மைக்ரோ பச்சத்’ எனும், புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
பங்குச் சந்தை சாராத, லாபத்தில் பங்கு பெறும் வகையில் அமைந்துள்ள, இந்த எண்டோமென்ட் நுண் காப்பீட்டு திட்டம், பாதுகாப்பையும் சேமிப்பையும் இணைந்து வழங்குகிறது.நுண் காப்பீட்டு திட்டங்களில், 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கும் திட்டம் அறிமுகமாவது, இதுவே முதன் முறை ஆகும்.
இத்திட்டத்தில், பாலிசிதாரர் பாலிசி காலத்திற்குள் காலமாகிவிட்டால் காப்பீட்டு தொகையும், பாலிசி காலத்தை நிறைவு செய்யும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு தொகையும் வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு, உடனடி தேவைகளுக்கான கடன் பெறும் வசதியும் உண்டு.இந்த பாலிசி, 18 வயது முதல், 55 வயது வரை நல்ல உடல் நிலையில் உள்ளோருக்கு, மருத்துவ பரிசோதனை இன்றியே வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|