பதிவு செய்த நாள்
19 பிப்2019
06:54

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடும் சரிவை சந்தித்தன. தொடர்ந்து, எட்டு வர்த்தக தினங்களாக, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, சரிவடைந்தது. நேற்று, இக்குறியீடு, 310.51 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 30,498.44 புள்ளிகளில் நிலை கொண்டது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 83.45 புள்ளிகள் குறைந்து, 10,640.95 புள்ளிகளில் நிலை பெற்றது.நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், வட்டி குறைப்பு தொடர்பாக, வங்கித் தலைவர்களுடன், 21ம் தேதி பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதன் எதிரொலியாக, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இன்டஸ் இன்டு, எச்.டி.எப்.சி., உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் விலை குறைந்தன.
மேலும், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., வேதாந்தா, ஐ.டி.சி., சன் பார்மா, கோல் இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள், விலை வீழ்ச்சியை சந்தித்தன.தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் பங்குகள் தான், ஏற்றம் கண்டன. அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 12 காசுகள் குறைந்து, 71.35 ஆக சரிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|