பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:17

புதுடில்லி : ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் முதலீட்டிற்கான, ‘ஏஞ்செல் டேக்ஸ்’ விதிகள் தளர்த்தப்பட்டு, கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வலைதளங்கள் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், ஓலா, ஊபர்’ போன்றவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன.இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க, ‘ஏஞ்செல் பண்டு’ நிறுவனங்கள், பங்கு மூலதன முறையில், முதலீடு செய்கின்றன. இதற்கு, வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.
எனினும், இந்த முதலீடு, ஸ்டார்ட் அப் நிறுவன சந்தை மதிப்பை விஞ்சியிருந்தால், 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதை, ‘ஏஞ்செல் டேக்ஸ்’ என்கின்றனர்.பாதிப்புஇது, முதலீடு என்ற பெயரில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தையும், வரி ஏய்ப்பையும் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரியால், நேர்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன.
இது குறித்த புகார்களை தொடர்ந்து, விரைவில், ஏஞ்செல் வரி விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையான, டி.பி.ஐ.ஐ.டி., தெரிவித்திருந்தது.அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் முதலீட்டிற்கான, வரிவிலக்கு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏஞ்செல் பண்டு நிறுவனத்தின் பங்கு மூலதனம் உட்பட, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின், 10 கோடி ரூபாய்கு உட்பட்ட முதலீட்டிற்கு, தற்போது வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு, 25 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்தற்போது, ஒரு நிறுவனம், பதிவு செய்த நாள் முதல், ஏழு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்து, ஒரு நிதியாண்டு விற்றுமுதல், 25 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், அது, ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்படும். இந்த வரம்பு, முறையே, 10 ஆண்டுகள் மற்றும் 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் அல்லது 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், பங்குச்சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 25 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீட்டிற்கு வரி விலக்கு கோரலாம்.
இது, வெளிநாடு வாழ் இந்தியர்கள், மாற்று முதலீட்டு நிதியங்களுக்கும் பொருந்தும்.அசையா சொத்துகள், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள், கடன்கள், பிற நிறுவன பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யாத ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வரி விலக்கு பெற தகுதி உண்டு.டி.பி.ஐ.ஐ.டி.,யின் அங்கீகாரம் பெற்ற, குறிப்பிட்ட சொத்துகளில் முதலீடு செய்யாத, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வரி விலக்கு சலுகை பெறலாம்.
இதற்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், டி.பி.ஐ.ஐ.டி.,யிடம், சுய பிரகடன அறிக்கை அளித்தால் போதும். அது, வருமான வரி துறைக்கு அனுப்பப்படும். வரி விலக்கு கோரி, வேறு எங்கும் விண்ணப்பிக்க தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.புதிய விதிமுறைகள், ஸ்டார்ட் அப் தொழிலை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகள் உயர வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஸ்டார்ட் அப் இந்தியா’மத்திய அரசு, 2016, ஜனவரியில் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஓராண்டில், சராசரியாக, 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ‘ஏஞ்செல் பண்டு’ நிறுவனங்களிடம் இருந்து, முதலீடு கிடைக்கிறது. நாட்டில், 14ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|