பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:18

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘செயில்’ நிறுவனம், அதன் மூன்று உருக்காலை பிரிவுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில், சேலம் உருக்காலை, கர்நாடகாவில், விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்காலை, மேற்கு வங்கத்தின், துர்காபூர் உருக்காலை ஆகியவை, இரு கட்ட ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்த மூன்று உருக்காலைகளும் தொடர்ந்து, இழப்பை சந்தித்து வருவதால், அவற்றை விற்பதே சிறந்த வழி என, மத்திய அரசு கருதுகிறது.
ஜெ.எஸ்.டபிள்யு., வேதாந்தா, டாடா ஸ்டீல், ஆர்சிலர் மிட்டல் ஆகிய நிறுவனங்கள், இந்த உருக்காலைகளை வாங்க முன்வரும் என, தெரிகிறது. இந்த விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும் என, தெரியவில்லை. ஆனால், அடுத்த மாதத்திற்குள், இந்நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில், 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு மாதத்தில், உருக்காலைகள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், இலக்கை எட்ட, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|