பதிவு செய்த நாள்
24 பிப்2019
23:35
நிதி நிர்வாகம் சிக்கலானது என கருதி, பலரும் இலக்குகளை வகுத்துக் கொள்வதையும், திட்டமிடுவதையும் தவிர்க்கின்றனர். இதனால், கணக்கில்லாமல் செலவு செய்யும், இலக்கில்லாமல் சேமித்து முதலீடு செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்க்க, முதலீட்டாளர்கள், குறிப்பாக முதல்முறை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
பணவீக்கம்:
இருபது ஆண்டுகள் கழித்து யோசித்துப் பாருங்கள். அப்போது, வீட்டுச்செலவு, கல்விச்செலவு, விலைவாசி எப்படி இருக்கும் என, நினைத்துப் பாருங்கள். இவை பல மடங்கு அதிகரித்திருக்கும்-. காரணம் பணவீக்கம்! எனவே, பணவீக்கத்தின் தாக்கத்தை வெல்லும் நிலையை பெற வேண்டும் என்பதே முதலீடு செய்வதன் நோக்கம்.நிதி இலக்குகள்: முதலீடு செய்வதன் அவசியத்தை உணர்ந்தபின், உங்களுக்கான இலக்குகளை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். இலக்குகளை குறுகிய கால இலக்கு (1 – 3 ஆண்டுகள்), மத்திய கால இலக்கு (3 – 7 ஆண்டுகள், நீண்ட கால இலக்கு (10 ஆண்டுகளுக்கு மேல்) என, பிரித்துக்கொள்ள வேண்டும்.
ஓய்வு காலம்:
நிதி இலக்குகளுக்கு ஏற்ப சேமித்து முதலீடு செய்ய வேண்டும். குறுகிய, மத்திய கால இலக்குகளுக்கு ஏற்ற நிதி சாதனங்களை நாட வேண்டும். ஓய்வு காலத்திற்கான சேமிப்பு நீண்ட கால இலக்குகளில் முக்கியமானவை. ஓய்வு காலத்திற்கான சேமிப்பை இயன்றவரை முன்னதாக துவங்குவது நல்லது.
சமபங்கு பலன்:
நிதி சாதனங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். நிதி சாதனங்கள், சமபங்கு சார்ந்த முதலீடு, நிரந்தர வருமானம் தருபவை (கடன்சார் முதலீடு) என இரு வகையாக அமைகின்றன. சம்பங்குகளில் ரிஸ்க் அதிகம் என்றாலும் பலன் அதிகம். நீண்ட கால நோக்கில் ஏற்றவை.
கால அளவு:
முதலீடு அளிக்கும் பலன், அதன் கால அளவையும் பொருத்தது. பொதுவாக நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால், கூட்டு வட்டி அல்லது மறு முதலீட்டின் பலனை பெறலாம். முன்னதாக துவங்கும் போது இது அதிக பலன் தரும். மேலும் ஒருவர் தன் ரிஸ்க் தன்மைக்கேற்ப முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|