பதிவு செய்த நாள்
24 பிப்2019
23:41
பி.எப்., முதலீட்டிற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வி.பி.எப்., மூலம் முதலீட்டை அதிகரிக்கும் வாய்ப்பை பரிசீலிக்கலாம் என, நிதி வல்லுனர்கள் பரிந்திரைக்கின்றனர்.
தொழிலாளர் சேம நில நிதியான பி.எப்., கீழ், தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு வரி விலக்கும் உண்டு. தற்போது இதற்கான வட்டி விகிதத்தை, 8.55 சதவீதத்தில் இருந்து, 8.65 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் தொகை தவிர, தாங்களே விரும்பி இந்த தொகையை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இது, வி.பி.எப்., என, குறிப்பிடப்படுகிறது.வட்டி விகிதம் உயர்த்தப்படும் சூழலில், இந்த வசதியை பயன்படுத்தி, பி.எப்., கணக்கில் மேலும் பணம் செலுத்தினால் அதிக பலன் பெறலாம் என்பதோடு, அதற்கேற்ப வரி விலக்கும் பெறலாம். பொதுவாக மற்ற வரி விலக்கு வாய்ப்புகளைவிட, இந்த வட்டி விகிதம் அதிகம் என்பது கவனிக்க வேண்டும்.
வி.பி.எப்., வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் இது தொடர்பாக தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த முறையில் முதலீடு செய்வது எளிதானது. ஆனால், இந்த தொகை நடுவில் விலக்கி கொள்ள முடியாதது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|