பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:26

வாஷிங்டன் : ‘பெப்சிகோ’ நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி, அமெரிக்காவின், ‘அமேசான்’ நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த, இந்திரா நுாயி, 1994ல், பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, நிதி, திட்டம், கொள்கை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார்.பெப்சிகோ நிறுவன இயக்குனர் குழு உறுப்பினராக, 2001ல், தேர்வு செய்யப்பட்டு, தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில், திறம்பட செயலாற்றினார்.
கடந்த, 2006 அக்டோபர் முதல், 2018 அக்டோபர் வரை, தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றார்.இவர், வர்த்தகத்தில் நவீன உத்திகளையும், புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தி, பெப்சிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தார். இந்திரா நுாயி, தற்போது, அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டார் பக்ஸ் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி, ரோசலின்ட் புரூவர், சமீபத்தில், அமேசான் இயக்குனர் குழுவில் இணைந்தார்.இதன் மூலம், அமேசான், ஒரே மாதத்தில், வெள்ளையரல்லாத இரு பெண்களை இயக்குனர் குழுவில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|