பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:27

புதுடில்லி : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., குரூப், 2021ல், இந்தியாவில், ‘சிட்ரான்’ கார் அறிமுகப்படுத்தப்படும் என, அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு முன், ‘பிரீமியர்’ குழுமத்துடன் இணைந்து, ‘பிஜோ பால் இந்தியா’ நிறுவனத்தின் கீழ், இந்தியாவில் கார் விற்பனையை துவக்க இருந்தது. ஆனால், 2001ல், ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.இதையடுத்து, 2011ல், மீண்டும் இந்திய சந்தையில், நடுத்தர கார் விற்பனையில் இறங்க உள்ளதாக அறிவித்தது. இத்திட்டமும் அமலுக்கு வராமல் முடங்கியது.இதையடுத்து, சி.கே.பிர்லா குழுமத்தின், ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க, 2017ல் முடிவு செய்தது.
இதையடுத்து, 2018ல், தமிழகத்தில், ஓசூரில், கார் இன்ஜின் தொழிற்சாலை துவக்கப்பட்டது. இந்நிலையில், 2021 இறுதிக்குள், இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும், ‘சிட்ரான்’ கார், சந்தைக்கு வரும் என, பி.எஸ்.ஏ., குருப் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், ‘பிஜோ, சிட்ரான், டி.எஸ்.,’ என, மூன்று வகை கார்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|