பதிவு செய்த நாள்
27 பிப்2019
23:29
புதுடில்லி : இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி, ஜனவரி மாதத்தில், 91.8 லட்சம் டன் என்றும், இது முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, 2 சதவீதம் குறைவு என்றும், உலக உருக்கு சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:ஜனவரி மாதத்தில், இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி, 91.8 லட்சம் டன். இதுவே, 2018 ஜனவரியில், 93.54 லட்சம் டன்னாக இருந்தது.உலகளவில், ஜனவரி மாதத்தில், 14.67 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டின் ஜனவரி மாதத்தைவிட, 1 சதவீதம் அதிகம் ஆகும்.
சீனாவை பொறுத்தவரை, 2018 ஜனவரியில், 7.19 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில், 4.3 சதவீதம் அதிகரித்து, 7.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.அமெரிக்கா ஜனவரியில், 76 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|