2,500  மலிவு விலை மருந்து கடைகள் 2,500 மலிவு விலை மருந்து கடைகள் ...  சிமென்ட் விலை அதிரடி உயர்வு:மூட்டைக்கு ரூ.77 வரை அதிகரிப்பு சிமென்ட் விலை அதிரடி உயர்வு:மூட்டைக்கு ரூ.77 வரை அதிகரிப்பு ...
இந்தியாவில் தான், ‘டேட்டா’ கட்டணம் குறைவு:‘ஆர்ஜியோ’வால் கட்டணத்தை குறைத்த போட்டி நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2019
23:39

புதுடில்லி:உலகிலேயே, இந்தியாவில் தான், மொபைல்போனில் தகவல், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதற்கான, ‘டேட்டா’ எனப்படும் தரவு பயன்பாட்டு கட்டணம் மிகக் குறைவாக உள்ளது.


முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் வருகையால், தொலைதொடர்பு துறை யில், போட்டி நிறுவனங்கள் வேறுவழியின்றி, டேட்டா கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, வலைதள நிறுவனமான, கேபிள், 230 நாடுகளில் நிலவும், மொபைல் டேட்டா கட்டணங்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகளவில், 1 ஜி.பி., டேட்டா பயன்பாட்டுக்கான சராசரி கட்டணம், 8.53 டாலராக உள்ளது. அதாவது, 600 ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இது, இந்தியாவில், 18.50 ரூபாய் என, மிகக் குறைவாக காணப்படுகிறது.அமெரிக்காவில், இதே அளவிலான தரவு பயன்பாட்டிற்கு, 12.37 டாலர்; பிரிட்டனில், 6.66 டாலர் வசூலிக்கப்படுகிறது.


இந்தியாவில், குறிப்பாக, அதிக அளவில் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், ஸ்மார்ட் போன் சந்தை பெரிதாகவும், போட்டி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக, டேட்டா பயன்பாட்டு கட்டணம் வெகு குறைவாக உள்ளது.ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியா, 43 கோடி பேருடன், சீனாவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முன்னேற்றம்


முகேஷ் அம்பானியின், ஆர்ஜியோ மொபைல்போன் சேவை, 2016, செப்., 5ல், அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளில், 28 கோடி வாடிக்கையாளருடன், மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. இலவச அழைப்பு, குறைந்த கட்டணத்தில் தரவுச் சேவை, மலிவு விலை, ‘பியூச்சர் போன்’ என, ஆர்ஜியோவின் அதிரடி திட்டங்களால், குறுகிய காலத்தில், வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.


இந்தாண்டு, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி, 19வது இடத்தில் இருந்து, 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் சொத்து மதிப்பு, ஓராண்டில், 4,010 கோடி டாலரில் இருந்து, 5,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது என, ‘போர்ப்ஸ்’ இதழ் தெரிவித்துள்ளது.


ஜிம்பாப்வே முதலிடம்


இந்தியாவில், 57 மொபைல் போன் சேவை திட்டங்களில், 1 ஜி.பி., ‘டேட்டா’ பயன்பாட்டு கட்டணம், குறைந்தபட்சம், 1.75 ரூபாய்; அதிகபட்சம், 99.90 ரூபாய் ஆக உள்ளது. இவை, அமெரிக்க டாலர் மதிப்பில், 0.02 மற்றும் 1.40 ஆகும்.அடுத்த இடங்களில், கிர்கிஸ்தான், 0.27, கஜகஸ்தான், 0.49, உக்ரைன், 0.51 டாலருடன் உள்ளன. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, ஜிம்பாப்வே நாட்டில் தான், மொபைல் போன், ‘டேட்டா’ கட்டணம், மிக அதிகமாக உள்ளது. இங்கு, 1 ஜி.பி., பயன்பாட்டிற்கு, 75 டாலர் வசூலிக்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)