வணிக வரி வருவாய்  77ஆயிரம் கோடி வணிக வரி வருவாய் 77ஆயிரம் கோடி ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.18 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.18 ...
அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை புதிய உச்சம்டிரம்ப் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2019
00:12

வாஷிங்டன்:அமெரிக்காவில், வரலாறு காணாத வகையில், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருப்பதற்கு, அதிபர் டொனால்டு டிரம்பின் மோசமான கொள்கைகளே காரணம் என, எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி மதிப்பு அதிகமாக இருந்தால், அதை, வர்த்தக பற்றாக்குறை என, அழைக்கின்றனர்.இதன்படி, அமெரிக்காவின் சரக்கு மற்றும் சேவைகளின் வர்த்தகப் பற்றாக்குறை, 2018, டிசம்பரில், 950 கோடி டாலர் அதிகரித்து, 5,980 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, நவம்பரில், 5,030 கோடி டாலராக இருந்தது.


கடந்த முழு ஆண்டில், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை, 6,880 கோடி டாலர் அதிகரித்து, 62 ஆயிரத்து, 100 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, 2017ல், 55 ஆயிரத்து, 230 கோடி டாலராக குறைந்து இருந்தது.ஏற்றுமதிஇதே காலத்தில், அமெரிக்காவின் ஏற்றுமதி, 1.49 லட்சம் கோடி டாலரில் இருந்து, 2.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதியும், 2.17 லட்சம் கோடி டாலரில்இருந்து, 3.12 லட்சம்கோடி டாலராக உயர்ந்துள்ளது.


அமெரிக்காவில், வரலாறு காணாத வகையில், சரக்கு பிரிவின் வர்த்தகப் பற்றாக்குறை, 89 ஆயிரத்து, 139 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.இதற்கு, டிரம்பின் மோசமான வர்த்தக கொள்கைகளே காரணம் என, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.இது குறித்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், பெரும்பான்மையாக உள்ள, ஜனநாயக கட்சியின் கொறடா, ஸ்டெனி எச்.ஹோயர் கூறியதாவது:


அரசின் மோசமான வர்த்தக கொள்கைகளால், நாட்டின் சரக்கு வர்த்தகப்பற்றாக்குறை, இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.டிரம்ப், தனக்குத் தானே வைத்த தேர்வில் தோல்வியை தழுவியுள்ளார். அவர், கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அலுமினியம், உருக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு, இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதிலும், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருப்பது, டிரம்ப் போட்ட கணக்கு தவறு என்பதை புலப்படுத்துவதாக, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்தியாவுடன் குறைந்தது


கடந்த, 2018ல், அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை, 160 கோடி டாலர் குறைந்து, 2,130 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, 2017ல், 2,290 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக் குறை, 41 ஆயிரத்து, 920 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)